ஃபியட் புன்டோ ஸ்போர்ட் 2013 அறிமுகம்

ஃபியட் புன்டோ ஸ்போர்ட் 2013 ஹைட்ச்பேக் கார் ரூ. 7.60 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய மாடலை விட வெளித்தோற்றத்தில் சில மாற்றங்கள் மற்றும் கருப்பு நிற கூரையை தந்துள்ளத்.

இரண்டு விதமான வண்ணங்களில் மட்டுமே வெளிவந்துள்ளது. அவை சிகப்பு மற்றும் வெள்ளை ஆகும். ஸ்போர்ட் பேட்ஜ் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது. பெடல்களில் அலுமினிய பிளேட் பொருத்தியுள்ளனர். ஸ்போர்ட் ஃபுளோர் மேட்ஸ், புகைப்போக்கில் குரோம் பூச்சு தரப்பட்டுள்ளது. வெள்ளை நிற காரில் சிகப்பு நிறத்தினை கொண்ட பின்புற பார்க்கும் கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது. சிகப்பு நிற காரில் வெள்ளை நிறத்தினை கொண்ட பின்புற பார்க்கும் கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபியட் புன்டோ ஸ்போர்ட்

முன்புறத்தில் காற்றுப்பைகள், இம்மொபைல்சர், ஏபிஎஸ், வேகத்தினை பொருத்து தானாகவே சென்ஸ் செய்து தேவையான ஒலி அளவினை தரவல்ல ஆடியோ அமைப்பினை கொண்டுள்ளது.

1.3 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் டீசல்  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 93 பிஎஸ் ஆகும்.  இதன் 209 என்எம் ஆகும். 5 வேக கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

ads

ஃபியட் புன்டோ ஸ்போர்ட் 2013 காரின் மைலேஜ் லிட்டருக்கு 20.5 ஆகும்.

ஃபியட் புன்டோ ஸ்போர்ட் 2013 காரின் விலை ரூ.7.60 லட்சம்.(டெல்லி விலை)

Comments