ஃபியட் லீனியா எலகன்ட் விற்பனைக்கு வந்தது

ஃபியட் லீனியா காரின் சிறப்பு பதிப்பாக ஃபியட் லீனியா எலகன்ட் கார் விற்பனைக்கு வந்துள்ளது. சில துனை கருவிகள் இணைக்கப்பட்டு தோற்றத்திலும் ஃபியட் லீனியா எலகன்ட் மாற்றத்தினை பெற்றுள்ளது.

ஃபியட் லீனியா எலகன்ட்
ஃபியட் லீனியா எலகன்ட் 

ஃபியட் லீனியா எலகன்ட் மாடலின் வெளிதோற்றம் மற்றும் உட்புறத்தில் புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. என்ஜினில் எந்த மாறுதல்களும் இல்லை.

முகப்பில் புதிய கருப்பு நிற கிரில் , பக்கவாட்டில் பாடி ஸ்கர்ட் , எலகன்ட் பெயர் பொறிக்கப்பட்ட பாடி ஸ்டிக்கர் , 16 இஞ்ச் ஆலாய் வீல் , மேற்கூரை கருப்பு நிற வண்ணத்தில் ,  ஸ்போர்ட்டிவ் ரியர் ஸ்பாய்லர் போன்றவற்றை பெற்றுள்ளது.

உட்புறத்தில் 6.5 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , புதிய இருக்கைகள் , கார்பெட் மற்றும் கதவு சில்களை பெற்றுள்ளது.

92பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 112பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1.4 லிட்டர் டி ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபியட் லீனியா எலகன்ட் விலை ரூ.9.99 லட்சம் (`EX-showroom Delhi)

Fiat Linea Elegante limited edition launched  

Comments

loading...