ஃபிரீலேண்டர் 2 பிசினஸ் கிளாஸ் அறிமுகம்

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஃபிரீலேண்டர் 2 இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது. தற்பொழுது குறைந்த விலையிலான பேஸ் எஸ் வேரியண்ட்டினை ரூ.37.63 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டாப் வேரியண்ட்களில் உள்ள பல வசதிகளை குறைத்தாலும் பாதுகாப்பு விடயங்களை குறைக்கவில்லை. முன்பு விற்பனையில் உள்ள எஸ்இ மற்றும் எச்எஸ்இ மாறுபட்டவையில் இருந்து குறைக்கப்பட்ட வசதிகள் எலக்ட்ரிக் உதவியுடன் இயங்கும் இரூக்கை அட்ஜஸ்ட்ர், ரீவர்ஸ் கேமாரா, மெர்டியன் ஆடியோ அமைப்பு போன்றவை குறைக்கப்பட்டுள்ளன.

ஃபிரீலேண்டர் 2

2.2 லிட்டர் டிடீ4 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 150பிஎஸ் மற்றும் டார்க் 420என்எம் ஆகும். 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, அவசரகால பிரேக் அமைப்பு, மலை ஏற உதவும் அமைப்பு போன்ற பாதுகாப்பு வசதிகள் பிசினஸ் கிளாசிலும் உள்ளன.

ads

ஃபிரீலேண்டர் 2  கார் விலை விபரம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

ஃபிரீலேண்டர் 2 எஸ்—ரூ.37.63 லட்சம்

ஃபிரீலேண்டர் 2 எஸ்இ–39.19 லட்சம்

ஃபிரீலேண்டர் 2 எச்எஸ்இ–44.42லட்சம்

Comments