ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கான்செப்ட் டீஸர்- பாரீஸ் மோட்டார் ஷோ 2016

வருகின்ற 2016 பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலின் டீஸரை வெளியிட்டுள்ளது. one-of-a-kind concept car’ என்ற பெயரில் மின்சார கார்களை ஃபோக்ஸ்வேகன் குழுமம் வெளியிட உள்ளது.

VW-EV-concept-Teaser

loading...

எதிர்கால உலகினை தீர்மானிக்கும் வகையில் மின்சார கார்களின் கான்செப்ட் மாடல்களை அனைத்து முன்னனி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்த உள்ளது. ஃபோக்ஸ்வேகன் MEB ( modular electrification kit) பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள இந்த கார் மிக சிறப்பான இடவசதி மற்றும் அதிகபட்சமாக 400 கிமீ – 600 கிமீ தொலைவு வரைபணிக்கும் வகையிலான சிங்கிள் சார்ஜ் சிஸ்டத்தை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டு முதல் ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி சொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வெளியிடப்பட்டுள்ள டீஸர் படங்களின் வாயிலாக பீட்டல் காரின் புரட்சிகரமான மாடலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வருகின்ற 2020 ஆம் ஆண்டிற்குள் 30 எலக்ட்ரிக் கார் மாடல்களை களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டு வருகின்றது. பாரீஸ் மோட்டார் ஷோ வாயிலாக ஃபோக்ஸ்வேகன் புதிய ஸ்லோகனாக “Think New” என்பதனை சேர்க்க உள்ளது.

VW-EV-concept-Teaser-fr

 

VW-EV-concept-Teaser-top

VW-EV-concept-Teaser-rear

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin