ஃபோக்ஸ்வேகன் பீட்டல் கார் டிசம்பர் 19 முதல்

வரும் டிசம்பர் 19ந் தேதி ஃபோக்ஸ்வேகன் பீட்டல் கார் மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.  ஃபோக்ஸ்வேகன் பீட்டல் கார் உலக பிரசத்தி பெற்ற மாடலாகும். தற்பொழுது முன்பதிவு நடந்து வருகின்றது.

volkswagen-new-beetle-1024x609

2009 முதல் 2013 வரை இந்திய சந்தையில் விற்பனையிலிருந்த பீட்டல் பெரிதாக வரவேற்பினை பெறாத காரணத்தால் சந்தையை விட்டு விலகியது. தற்பொழுது சொகுசு கார்களுக்கான சந்தை வளர்ந்து வருவதனால் மீண்டும் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.

loading...

இந்திய வரவுள்ள 2016 ஃபோக்ஸ்வேகன் பீட்டல் காரில் 149 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பூச்சி போன்ற அமைப்பினை கொண்ட பீட்டல் கார் உலக ஆட்டோமொபைல் வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் மாடலாகும்.

கிளாசிக் தோற்றத்தினை கொண்ட பை ஸெனான் முகப்பு விளக்குளுடன் பகல் நேர எல்இடி விளக்குகள், நேர்த்தியாக அமைந்துள்ள பானெட் தோற்றம் பக்கவாட்டில் 16 இஞ்ச் அலாய் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.

volkswagen-new-beetle-rear-1024x637

உட்புறத்தில் 4 இருக்கைகள் , கிளாசிக் டேஸ்போர்டு  , நவீன வசதிகள் , ஏபிஎஸ் , இபிடி , 4 காற்றுப்பைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளதால் ரூ.27 லட்சம் முதல் 31 லட்சத்தில் விலை இருக்கலாம். பீட்டல் காரின் போட்டியாளர்கள் மினி கூப்பர் மற்றும் ஃபியட் அபார்த் 595 ஆகும்.

Volkswagen Beetle to launch on Dec 19 , 2015 in India

loading...
27 Shares
Share27
Tweet
+1
Pin