ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனை நிறுத்தம் – நடந்தது என்ன ?

தற்காலிகமாக போலோ காரின் விற்பனையை ஃபோக்ஸ்வேகன்  இந்தியா நிறுவனம் நிறுத்தியுள்ளது.  இந்தியாவில் போலோ மாசு அளவு பிரச்சனையால் நிறுத்தபடவில்லை என்பதனை ஃபோக்ஸ்வேகன் உறுதி செய்துள்ளது.

volkswagen-polo-new

போலோ கார் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துமாறு தனது டீலர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியதன் பின்னனி போலோ காரில் உள்ள ஹேன்ட் பிரேக்கில் பிரச்சனை இருப்பதனை ஃபோக்ஸ்வேகன் உறுதி செய்துள்ளது.

loading...

ஹேன்ட் பிரேக் பிடிக்கும்பொழுது பிரேக் லைனர்கள் உடைவதனால்தான் இந்த முடிவினை ஃபோக்ஸ்வேகன் மேற்கொண்டுள்ளது. மேலும் விற்பனை செய்யப்பட 389 கார்களிலே இதே பிரச்சனை இருப்பதனால் ஆய்வு செய்ய அந்த கார்களை திரும்ப அழைக்க முடிவெடுத்துள்ளது.  மேலும் தற்பொழுது தயாரிக்கப்பட்டு டெலிவரி செய்யும் நிலையில் உள்ள கார்களை ஆய்வு செய்ய உள்ளதால் முன்பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மாடலிலும் மாசு அளவு மோசடி உள்ளதா என்பதனை சோதனை செய்ய ஆராய் அமைப்பு முடிவு செய்துள்ளது.

மாசு மோசடி பிரச்சனையால் தன் நன்மதிப்பினை இழந்த ஃபோக்ஸ்வேகன் மிகுந்த நிதி சுமையால் தவிப்பதனால் சில சிக்கன நடவடிக்கையில் ஈடுபட உள்ளதால் புதிய புகாட்டி வேரான் சிரோன் மாடலை ஒரங்கட்ட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது.

Volkswagen Halts Polo sales due to Hand brake issue

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin