ஃபோக்ஸ்வேகன் போலோ GTI இந்தியா வருகை

  ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் போலோ GTI மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்க்கான வாய்ப்புகள் உள்ளது. போலோ ஜிடிஐ பெர்ஃபாமென்ஸ் ஹேட்ச்பேக் சோதனை ஓட்டத்தில் உள்ளது.

  ஃபோக்ஸ்வேகன் போலோ GTI

  தற்பொழுது வெளிவந்துள்ள சோதனை ஓட்ட படங்கள் போலோ ஜிடிஐ மாடல் கார் உலகளவில் விற்பனையில் உள்ள மிக சிறப்பான மாடலாகும். இந்த காரில் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

  ஆடி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 1.8 டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் ஆடி ஏ3 மற்றும் ஸ்கோடா ஆக்டாவியா போன்ற கார்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த என்ஜின் 190பிஎச்பி ஆற்றலை தரும் மற்றும் முறுக்குவிசை 250என்எம் ஆகும். 7 வேக டிஎஸ்ஜி தானியங்கி கியர்பாக்ஸ் மாடல் இந்தியாவிற்க்கு வரும்.

  போலோ ஜிடிஐ கார் 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்ட 6.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். இதன் உச்சகட்ட வேகம் 250 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

  சாதரன போலோ மாடலை விட முன் மற்றும் பின்புற பம்பர்களில் சில ஸ்டைலிங் மாற்றங்களை கொண்டுள்ளது. பெரிய ஆலாய் வீல் , இரட்டை பேரல் புகைப்போக்கி பெற்றுள்ளது.

  ads

  உட்புறத்தில் ஸ்போர்ட்டிவ் இருக்கைகள் , புதிய ஸ்டியரிங் வீல் மற்றும் அலுமினிய பெடல்களை கொண்டிருக்கும்.

  முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டால் ரூ.16.50 லட்சத்தில் விற்பனைக்கு வரலாம். பெர்ஃபாமென்ஸ் பிரியர்களுக்காக போலோ GTI  ஹேட்ச்பேக் ஆகும்.

  சோதனை ஓட்ட படங்கள் புனே ஆலையின் அருகே எடுக்கப்பட்டுள்ளது.

  ஃபோக்ஸ்வேகன் போலோ GTI

  VW India plan to launch Polo GTI
  imagesource

  Comments