ஃபோர்டு ஃபிகோ செப்டம்பர் 23 முதல்

வரும் செப்டம்பர் 23ந் தேதி புதிய ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. ஃபிகோ ஆஸ்பயர் காரை போலவே ஃபோர்டு ஃபிகோ கார் விளங்கும்.

ford-figo-hatchback

ஃபிகோ ஆஸ்பயர் சில வாரங்களுக்கு முன்பாக விற்பனைக்கு வந்தது. அதனை தொடர்ந்து வரும் ஃபிகோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வரவுள்ளது.

loading...

ஆஸ்பயர் காரில் பொருத்தப்பட்டிருந்த அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் வரவுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ஃபிகோ காரில் பல நவீன அம்சங்களை பெற்றிருக்கும் . குறிப்பாக இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , ஏபிஎஸ் இபிடி , 2 காற்றுப்பைகள் அனைத்து வேரியண்டிலும் டாப் வேரிண்டில் 6 காற்றுப்பைகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது.

ஃபிகோ காரின் போட்டியாளர்கள் கிரான்ட் ஐ10 , மாருதி ஸ்விஃப்ட் மற்றும் போல்ட் போன்ற கார்கள் விளங்கும். ஃபோர்டு ஃபிகோ கார் விலை ரூ.3.90 லட்சத்தில் தொடங்கலாம்.

New Ford figo to launch on Sep 23, 2015

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin