ஃபோர்டு இந்தியா 1 லட்சம் கார்கள் உற்பத்தி – சனந்த் ஆலை

குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் அமைந்துள்ள  ஃபோர்டு இந்தியா பிரிவின் தொழிற்சாலையில்  1 லட்சம் கார்கள் உற்பத்தியை கடந்துள்ளது. 14 மாதங்களில் 1 லட்சம் கார்களை ஃபோர்டு உற்பத்தி செய்துள்ளது.

ford-figo-front ஃபோர்டு இந்தியா 1 லட்சம் கார்கள் உற்பத்தி - சனந்த் ஆலை

சென்னை ஆலையை தொடர்ந்து ஃபோர்டு இந்தியாவில் அமைத்திருக்கும் இரண்டாவது தொழிற்சாலையான சனந்த் ஆலையில் ஃபிகோ ,ஆஸ்பயர் போன்ற கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ரூ.6700 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஆலையின் வாயிலாக இந்திய மட்டுமல்லாமல் 25க்கு மேற்பட்ட  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. ஆண்டுக்கு 2,40,000 கார்கள் மற்றும் 2,70,000 இன்ஜின்கள் தயாரிக்கும் திறனை கொண்டதாக விளங்குகின்றது.

கடந்த சில மாதங்களாக ஃபோர்டு நிறுவனம் ஏற்றுமதியில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகின்றது. ஆகஸ்ட் 2016-ல் 17,860 அலகுகள் ஏற்றுமதி செய்து இந்தியாவின் முன்னனி ஏற்றுமதியாளராக ஃபோர்டு உயர்ந்துள்ளது.

ஃபிகோ ஹேட்ச்பேக் மற்றும் ஆஸ்பயர் செடான் காரில் பல நவீன வசதிகளை பெற்றுள்ளது. குறிப்பாக 6 காற்றுப்பைகளை ,ஏபிஎஸ் , இபிடி மற்றும் ஃபோர்டு சிங்க் 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை பெற்றுள்ளது.

Ford-Figo-Aspire-side ஃபோர்டு இந்தியா 1 லட்சம் கார்கள் உற்பத்தி - சனந்த் ஆலை

ஃபிகோ , ஆஸ்பயர் இன்ஜின்

87 bhp ஆற்றலை வெளிப்படுதும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 112 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

110 bhp ஆற்றலை வெளிப்படுதும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 136 Nm ஆகும். இதில் 6 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

98.6 bhp ஆற்றலை வெளிப்படுதும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 215 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

போர்ட் பிகோ , ஆஸ்பயர் விலை சரிவு

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin