ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி சிறப்பு பார்வை

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்த 17 நாட்களிலே முன்பதிவு 30000 கடந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையே ஈக்கோஸ்போர்ட் காரை வியந்து பார்க்கும் நிலையில் உள்ள ஈக்கோஸ்போர்ட் காரின் சிறப்புகள் மற்றும் முழுவிவரங்களை காணலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இந்திய எஸ்யூவி சந்தை

இந்தியாவின் எஸ்யூவி சந்தையில் பல ஆண்டுகளாக முதன்மை வகித்து வந்த ஸ்கார்பியோ காரை டஸ்டர் ஓரம்கட்ட தொடங்கிவிட்டது. அதனை தொடர்ந்து தற்பொழுது ஈக்கோஸ்போர்ட் வெளிவந்துள்ளது. மேலும் மினி எஸ்யூவி என்ற நோக்கத்தினை அனைத்து நிறுவனங்களும் கையில் எடுத்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குள் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் மினி எஸ்யூவி கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் மொத்தம் 10 விதமான மாறுபட்டவைகள் உள்ளன. அவற்றில் பேஸ் வேரியண்ட் ஆம்பியண்ட், மிட் வேரியண்ட் டிரென்ட்,  டாப் வேரியண்ட் டைட்டானியம், டாப் வேரியண்ட்  டைட்டானியம் ஆப்ஷனல் ஆகும்.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் நீளம் 3999மிமீ, அகலம் 1765மிமீ, உயரம் 1708, மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200மிமீ ஆகும். எரிபொருள் கலன் கொள்ளவு 52 லிட்டர் ஆகும். பின்புற இடவசதி 346லிட்டர் பின்இருக்கைகளை மடக்கினால் 705லிட்டர் இடவசதி கிடைக்கும்.
ads

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் என்ஜின் விபரங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரில் 3 விதமான என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் விபரங்கள்

1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்

1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் ஆனது 1.5 லிட்டருக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினாகும். 125பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 170என்எம் ஆகும். 5 வேக மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது 112பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 140என்எம் ஆகும். 5 வேக மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

1.5 லிட்டர் டீசல் என்ஜின்

1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆனது 91பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 204என்எம் ஆகும். 5 வேக மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் என்ஜின்

உலகின் மிக சிறந்த என்ஜினுக்கான விருதினை  வென்ற ஈக்கோபூஸ்ட் டாப் வேரியண்டான டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வடிவம்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவி காரானது ஹேட்ச்பேக் வடிவம் மற்றும் எஸ்யூவி காரின் தோற்றம் போன்றவற்றை கலந்தே தந்துள்ளனர். மிக  சிறப்பான கம்பீரத்தினை தரக்கூடிய கொண்ட முகப்பு கிரில் மற்றும் விளக்குகள் மேலும் ஏரோடைனிமிக் வடிவமைப்பினை கொண்டுள்ளது. பின்புறத்திலும் ஸ்டைலான தோற்றம் எஸ்யூவி என்பதனை உறுதிசெய்யும் வகையில் ஸ்பேர் வீலை பின்புறத்தில் வைத்துள்ளனர்.
7 விதமான வண்ணங்களில் ஈக்கோஸ்போர்ட் கிடைக்கும்.
உட்ப்புற கட்டமைப்பில் ஃபியஸ்டா காரை ஃபோர்டு ஞாபகப்படுத்தினாலும் உட்ப்புற கட்டமைப்பும் சிறப்பாகவே உள்ளது. பின்புற இடவசதி 346லிட்டர் பின்இருக்கைகளை மடக்கினால் 705லிட்டர் இடவசதி கிடைக்கும்.
பாதுகாப்பு வசதிகள்

பேஸ் வேரியண்டான ஆம்பியன்டில் ஏபிஎஸ் மற்றும் காற்றுப்பைகள் போன்ற வசதிகள் இல்லை. பின்புற டோர்களில் பவர் வின்டோ கிடையாது.  மற்ற வேரியண்ட்களில் ஏபிஎஸ், காற்றுப்பைகள் போன்ற வசதிகளை கொடுத்துள்ளனர். 
இந்தியாவிலே முதன்முறையாக ஃபோர்டு அவசரகால உதவி வசதியை தந்துள்ளது. இந்த வசதியானது அலைபேசியை பூளூடுத் இணைப்பு மூலம் இணைத்து செயல்படுகின்றது. விபத்து நேரிட்டால் 108 அவசர சேவைக்கு தானியிங்கியாக செயல்பட்டு விபத்தினை தெரிவிக்கும். இதன் மூலம் அவசர உதவி விரைவாக கிடைக்கும். இது அனைத்து வேரியண்டிலும் கிடைக்கும்.
Ford Emergency Assistance System
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வாங்கலாமா ?
ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மிக சிறப்பான தோற்றம் குறைவான விலையில் பல வசதிகளை கொண்டுள்ளது. 7 லட்சம் முதல் 10 லட்சம் விலையில் ஹேட்ச்பேக் அல்லது செடான் வாங்க விரும்புபவர்கள் மாற்றாக எஸ்யூவி காரை முயற்சிக்கலாம். பாதுகாப்பு வசதிகள் மிகுந்த டாப் வேரியண்டை வாங்க முயலுங்கள்.

குறைகள் என்று சொன்னால் 4×4 டிரைவ் இல்லை இடவசதி சற்று குறைவாகவே உள்ளது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலை விபரம் (சென்னை எக்ஸ்ஷோரூம்)

1.5 ஆம்பின்ட் பெட்ரோல்— 5.74 லட்சம்

1.5 டிரென்ட் பெட்ரோல்—–6.28 லட்சம்

1.5 டைட்டானியம் பெட்ரோல்–7.72 லட்சம்

1.5 டைட்டானியம் பெட்ரோல்(ஆட்டோமேட்டிக்)–8.68 லட்சம்

1.5 ஆம்பின்ட் டீசல்—6.87 லட்சம்

1.5 டிரென்ட் டீசல்—–7.82 லட்சம்

1.5 டைட்டானியம் டீசல்–8.86 லட்சம்

1.5 டைட்டானியம் டீசல்(O)–9.25 லட்சம்

1.0 டைட்டானியம் பெட்ரோல்–8.12 லட்சம்

1.0 டைட்டானியம் பெட்ரோல்(O)-8.52 லட்சம்Comments