ஃபோர்டு மஸ்டாங் கார் ஜனவரி 28 வருகை

வரும் ஜனவரி 28ந் தேதி ஃபோர்டு மஸ்டாங் கார் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அமெரிக்காவின் மிக பிரபலமான ஸ்போர்ட்டிவ் காராக மஸ்டாங் விளங்குகின்றது.

Ford-Mustang-1024x722 ஃபோர்டு மஸ்டாங் கார் ஜனவரி 28 வருகை

ஃபோர்டு மஸ்டாங்

1964 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மஸ்டாங் முதன்முறையாக வலதுபக்க ஸ்டீயரிங் முறைக்கு தற்பொழுது தான் வந்துள்ளது. கடந்த 50 வருடங்களாக அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த மஸ்டாங் பல சர்வதேச நாடுகளுக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதை கடந்த வருடத்தில் தொடங்கியது.

பல விதமான என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் ஃபோர்டு மஸ்டாங் காரில் 3.7 லிட்டர் வி6 என்ஜின் 300PS ஆற்றல் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்தும்.  2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் 310PS ஆற்றல் மற்றும் 434Nm டார்க் வெளிப்படுத்தும்.  மற்றொரு என்ஜின்  5.0 லிட்டர் V8 என்ஜின் 435PS ஆற்றல் மற்றும் 542Nm டார்க் வெளிப்படுத்தும். இவற்றில் இந்தியாவிற்கு டாப் மாடலான 5.0 லிட்டர் பொருத்தப்பட்ட என்ஜின் விற்பனைக்கு வரலாம்.

பல நவீன அம்சங்களை பெற்ற இந்த ஸ்போர்ட்ஸ் காரில் இரண்டு இருக்கைகள் மற்றும் இரு கதவுகள் இடம்பெற்றிருக்கும். மஸில் ரக ஸ்போர்ட்ஸ் காரில் மஸ்டாங் கார் மிக பிரபலமான  மாடலாகும். இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட மாடலாக விற்பனைக்கு வரும் மஸ்டாங் காரின் விலை ரூ. 60 லட்சம் முதல் 75 லட்சத்திற்குள் அமையலாம்.

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin