ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி புதிய வேரியண்ட்

  ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி காரில் இரண்டு புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இஎக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் வேரியண்ட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

  ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் விற்பனைக்கு வந்தது. இதுவரை 2600 கார்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. தற்பொழுது இரண்டு புதிய மாறுபட்டவைகளை அறிமுகம் செய்துள்ளனர்.

  இஎக்ஸ் வேரியண்ட்டில் 2596சிசி டர்போ டீசல் என்ஜின் பொருத்தபட்டுள்ளது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். பவர் ஸ்டீயரீங் சென்ட்ரல் லாக்கிங், ஏசி, பனி விளக்குகள் கொண்டுள்ள இஎக்ஸ் மாறுபட்டவை டாக்ஸி சந்தையை குறிவைத்து களமிறக்கியுள்ளனர்.

  ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி

  எஸ்எக்ஸ் மாறுபட்டவை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2.2 லிட்டர் ஒஎம்611 காமன் ரெயில் என்ஜின் பொருத்தியுள்ளனர். இது பிஎஸ் 4 என்ஜின் ஆகும். இவற்றில் ஏபிஎஸ், இபிடி போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

  ads

  மேலும் மிக விரைவில் எல்எக்ஸ் என்ற மாறுபட்டவை 4×4 டிரைவ் போன்ற வசதிகளுடன் பல பாதுகாப்பு வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

  ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி  விலை விபரம்

  ஃபோர்ஸ் ஒன் இஎக்ஸ் 6 இருக்கை விலை–ரூ.8.99 லட்சம்

  ஃபோர்ஸ் ஒன் எஸ்எக்ஸ் 6 இருக்கை விலை–ரூ.11.79 லட்சம்

  ஃபோர்ஸ் ஒன் எஸ்எக்ஸ் 7 இருக்கை விலை–ரூ.11.71 லட்சம்

  ஃபோர்ஸ் ஒன் எஸ்எக்ஸ் 6 இருக்கை (ஏபிஎஸ்)விலை–ரூ.12.06 லட்சம்

  ஃபோர்ஸ் ஒன் எஸ்எக்ஸ் 7 இருக்கை (ஏபிஎஸ்)விலை–ரூ.11.99 லட்சம்

  Comments