அசோக் லேலண்டின் பாட்னர் டிரக் மற்றும் மிட்ர் பஸ்

அசோக் லேலண்ட் நிறுவனம் புதிய இலகுரக பாட்னர் டிரக் மற்றும் மிட்ர் பஸ்யினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.  3.5 முதல் 7 டன் வரையிலான பிரிவில் தோஸ்த் டிரக்கினை தொடர்ந்து இலகுரக எடை பிரிவில் புதிய பாட்னர் டிரக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாட்னர் இருக்கை அமைப்பானது கார்களுக்கு நிகரான இன்டிரியரை கொண்டிருக்கும். மேலும் ஏசி வசதியினை ஆப்ஷனலாக டாப் மாடலலில் இருக்கும். மேலும் பவர் ஸ்டீயரிங் நிரந்தர அம்சமாக இருக்கும்.

அசோக் லேலண்ட்

4 லோடு எடையினை தாங்கும் வகையில் பாட்னர் விளங்கும் மொத்த எடை 6.6 டன் ஆகும்.  இரண்டு விதமான வீல்பேஸ்களில் கிடைக்கும் அவை 2850மிமீ மற்றும் 3350 மிமீ ஆகும். பாட்னர் டிரக் ஆனது நிசான் ஃஎப்24 பிளாட்ஃபாரத்தில் உருவாக்கியுள்ளனர்.

பாட்னர் டிரக் விலை 8.19 லட்சம் மற்றும் 9.19 லட்சம் ஆகும்.

மிட்ர் பஸ்

மிட்ர் பஸ் (MITR BUS)ஆனது பள்ளி குழந்தைகளுக்கும் மற்றும் அலுவலக பயன்பாடிற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.குறிப்பாக மிட்ர் ஸ்டாஃப் பயன்பாட்டினை குறிவைத்தே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அசோக் லேலண்ட் மிட்ர் பஸ்

மிட்ர் பஸ் விலை 12.49 லட்சம் ஆகும்.

இரண்டிலும் இசட்டி30 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இவையிரண்டுமே அசோக் லேலண்ட்-நிசான் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

Comments

loading...