அசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்டு நிறுவனம் 3600 பேருந்துகளுக்கான ஆடர்களை வெவ்வேறு மாநில போக்குவரத்து கழகங்களிடம் இருந்து பெற்றுள்ளது.

Ashok-Leyland-hybus

loading...

அசோக் லைலேண்ட் நிறுவனத்தின் உள்நாட்டு பேருந்து சந்தை மதிப்பு கடந்த வருட  முதல் நிதி காலாண்டில் 29.2 சதவீதமாக இருந்தது . தற்பொழுது இந்த வருடத்தின் முதல்  நிதிகாலாண்டு முடிவில் 30.1 சதவீதமாக உள்ளது. மேலும் இந்திய பேருந்து சந்தை மதிப்பில் 33.2 சதவீதமாக கடந்த ஆண்டில் இருந்த லேலண்டு சந்தை மதிப்பு தற்பொழுது 35.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் நடுத்தர மற்றும் கனரக வாகன பிரிவின் உற்பத்தி  வளர்ச்சி கடந்த ஆண்டில் 14.5 சதவீதமாக இருந்துவந்த நிலையில் தற்பொழுது 18.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சியாம் அறிக்கையின் படி பயணிகளுக்கான வர்த்தக வாகன பிரிவின் வளர்ச்சி சிறப்பாகவே உள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போட்டியாளர்களான டாடா , வால்வோ-ஐஷர் கூட்டணி போன்றவைகளும் சிறப்பான ஆர்டர்களை பெற்றுள்ளது.

loading...