அதிரடியாக களமிறங்கிய ஃபியட் லீனியா கிளாசிக்

இந்திய சந்தையில் புதிய உத்வேகத்துடன் ஃபியட் களமிறங்கிய பின்னர் அதிரடியாக லீனியா செடான் காரினை ரூ5.99 லட்சத்தில் லீனியா கிளாசிக் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள லீனியா பேஸ் மாடலை விட ரூ.1 லட்சம் குறைவான விலையில் லீனியா கிளாசிக் வெளிவந்துள்ளது கார் சந்தையில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
 ஃபியட் லீனியா கிளாசிக்
15 இஞ்ச் அலாய் வீல்களுக்கு பதிலாக 14 இன்ச் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திசை திருப்பும் சக்கரத்தில் உள்ள கட்டுப்பாடு பொத்தான்கள்,  ஆடியோ சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல், பின்புறம் பவர் விண்டோ போன்ற வசதிகள் இருக்காது.
மேலும் ஃபியட் புன்டோ காரில் உள்ளதினை போல டேஸ்போர்டு மாற்றப்பட்டுள்ளது.
டீசல் காரில் 1.3 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் காரில் 1.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
 ஃபியட் லீனியா கிளாசிக் விலை விபரம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)
 ஃபியட் லீனியா கிளாசிக் பெட்ரோல் ரூ.5.99 லட்சம்
 ஃபியட் லீனியா கிளாசிக் டீசல்–ரூ6.95 லட்சம்
 ஃபியட் லீனியா கிளாசிக் ப்ளஸ் டீசல்–ரூ.7.51 லட்சம்

Comments