அபார்த் அவென்ச்சுரா கிராஸ்ஓவர் கார் விபரம்

ஃபியட் அவென்ச்சுரா கிராஸ்ஓவர் மாடலின் அபார்த் அவென்ச்சுரா பெர்ஃபாமென்ஸ் காரின் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது. அபார்த் பிராண்டில் பெர்ஃபாமென்ஸ் கார்களை தொடர்ந்து அறிமுகம் செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது.

ஃபியட் அவென்ச்சுரா
ஃபியட் அவென்ச்சுரா

அபார்த் பிராண்டில் முதல் காராக அபார்த் 595 காம்பெடிஷன் விற்பனைக்கு வந்தது. அதனை தொடர்ந்து அபார்த் புன்ட்டோ இன்னும் சி வாரங்களில் வரவுள்ளது. அவென்ச்சுரா கிராஸ்ஓவர் மாடலும் அபார்த் பிராண்டில் வரவுள்ளது.

அவன்ச்சுரா கிராஸ்ஓவர் ரக மாடலில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 140எச்பி மற்றும் டார்க் 210என்எம் ஆகும்.  அபார்த் அவென்ச்சுரா கார் மைலேஜ் லிட்டருக்கு 17.1 கிமீ  ஆகும்.

அபார்த் அவென்ச்சுரா காரில் ஃபியட் லோகோவிற்க்கு பதிலாக அபார்த் பிராண்டின் லோகோ இடம்பெற்றிருக்கும். மேலும் பாடியில் அபார்த் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டிருக்கும். 16 ” அலாய் வீல் , 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

அபார்த் அவென்ச்சுரா கிராஸ்ஓவர்

அபார்த் அவென்ச்சுரா கிராஸ்ஓவர்

அபார்த் புன்ட்டோ எவோ காரை தொடர்ந்து அபார்த் அவென்ச்சுரா கார் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் சந்தைக்கு வரவுள்ளது.

image credits : team fiat motoclub facebook