அபார்த் புன்ட்டோ கார் அக்டோபர் 19 முதல்

வரும் அக்டோபர் 19ந் தேதி அபார்த் புன்ட்டோ பெர்ஃபாமென்ஸ் கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 145எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த காராக புன்ட்டோ வரவுள்ளது.

அபார்த் புன்ட்டோ

இந்தியாவில் ஃபியட் அபார்த் பிராண்டில் விற்பனைக்கு வரவுள்ள இரண்டாவது காராக அபார்த் புன்ட்டோ கார் பெர்ஃபாமென்ஸ் பிரியர்களுக்கு சிறப்பான காராக அமையும்.

145எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் முறுக்குவிசை 212என்எம் ஆகும்.

0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 8.8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். அபார்த் புன்ட்டோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 16.3கிமீ ஆகும். 

சிறப்பான பெர்ஃபாமென்ஸ் ரக காராக வரவுள்ள அபார்த் புன்ட்டோ காரினை தொடர்ந்து அபார்த் அவென்ச்சூரா மாடல் வரவுள்ளது. அபார்த் புன்ட்டோ காரின் விலை ரூ.10 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

Abarth Punto to launch on october 19 , 2015