அவிக்னா ஏடிவி மற்றும் குவாட் பைக் அறிமுகம்

அவிக்னா மோட்டார் ஸ்போரட்ஸ் நிறுவனம் புதிய ஏடிவி ரக ஆஃப் ரோட் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. அவிக்னா ஏடிவி ரூ.1.5 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Avigna-3W-Trike அவிக்னா ஏடிவி மற்றும் குவாட் பைக் அறிமுகம்
 Avigna Motor Sports 3W Trike

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட அவிக்னா மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பாகங்களை தருவித்து அசெம்பிள் செய்து விற்பனை செய்ய உள்ளது.

ஏடிவி வாகனங்கள் குண்டு குழிகள் நிறைந்த சேறு மற்றும் சகதி நிறைந்த பகுதியில் மிக இலகுவாக ஓட்டி சிறப்பான அனுபவத்தினை பெற உதவும் வாகனமாகும்.

அவிக்னா மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் ஏடிவி , நீரிலும் நிலத்திலும் செல்லும் ஆம்பிபியஸ் வாகனங்கள், எலக்ட்ரிக் கோல்ஃப் கார்ட்டுகள் மற்றும் விவசாய பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

125சிசி +, 200சிசி+ , 250சிசி + , 500சிசி+ வரையிலான பல விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். மேலும் அதிகப்பட்சமாக வாடிக்கையாளர் விரும்பினால் 1200சிசி என்ஜின் ஆப்ஷனிலும் வடிவமைத்துக்கொள்ளலாம்.

மோட்டார் விளையாட்டு துனை கருவிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை ரூ.25000 முதல் ரூ.2 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும்.

இந்தியாவில் முதன்முறையாக பெங்களூரு நகரில் தனது சேவை மையத்தினை தொடங்கியுள்ளது. மற்ற நகரங்களிலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளது.மேலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ஆஃப் ரோட் அனுபவத்தினை பெறும் வகையில் பெங்களூரு நகரின் ஹைன்னூரில் 6 கிமீ தூரத்தில் இதற்கென சிறப்பு ஆஃப் ரோட் பகுதியை உருவாக்கியுள்ளனர்.

கர்நாடாகா மாநிலத்தின் பொது சாலைகளில் பயன்படுத்த ஆர்டிஓ அனுமதி வழங்கியுள்ளது . இருந்தபொழுதும் ஆராய் அனுமதி கட்டாயமாகும். இந்தியாவில் போலாரீஸ் நிறுவனமும் ஏடிவி வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது.

Avigna Motor Sports launches range of ATVs and Quad Bikes

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin