புதிய ஆடி Q7 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

இரண்டாம் தலைமுறை ஆடி Q7 எஸ்யூவி கார் ரூ.72 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆடி Q7 எஸ்யூவி கார் முழுதும் வடிவமைகப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது.

audi-q7

முந்தைய மாடலை விட 325கிலோ எடை குறைவாக 2060 கிலோ எடையுள்ள புதிய ஆடி Q7 காரில் பல நவீன வசதிகளுடன் தோற்றத்திலும் உட்புறத்திலும் சில மாற்றங்களை பெற்றுள்ளது. இந்தியாவில் 3.0 லிட்டர் என்ஜின் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகின்றது.

249 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 45 TDI 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 600என்எம். இதில் உள்ள 8 வேக டிப்டிரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் 4 வீல்களுக்கும் ஆற்றல் குவாட்ரோ டிரைவ் சிஸ்டம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றது.

0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்ட 7.1 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆடி க்யூ7 எஸ்யூவி காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 234கிமீ ஆகும். முந்தைய மாடலை விட 22 % எரிபொருள் ஆள்ளல் அதிகரிக்கப்பட்டு லிட்டருக்கு 14.25 கிமீ மைலேஜ் தரும்.

பிரிமியம் ப்ளஸ் மற்றும் டெக்னாலாஜி என இரண்டு விதமான வேரியண்டில் ஆடி க்யூ7 கிடைக்கின்றது. இதில் 360 டிகிரோ கோண கேமரா உதவி , பார்க்கிங் அசிஸ்ட் , 19 ஸ்பீக்கர்களை கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டம் , மேட்ரிக்ஸ் எல்இடி முகப்பு விளக்குகள் , MMI இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் என பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

 

2016-Audi-Q7-

தற்பொழுது முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் ஆடி Q7 எஸ்யூவி அடுத்த ஆண்டின் மத்தியில் இந்தியாவிலே கட்டமைக்கப்பட உள்ளது. ஆடி க்யூ7 காரின் போட்டியாளர்கள் வால்வோ XC90 , பிஎம்டபிள்யூ X5 , மெர்சிடிஸ் GL மற்றும் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஆகும்.

ஆடி Q7 எஸ்யூவி கார் விலை

Audi Q7 45TDI Premium Plus – ரூ. 72 லட்சம்

Audi Q7 45TDI Technology – ரூ 77.5 லட்சம்

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

Audi Q7 SUV launched in India

audi-q7-rear

[adrotate banner=”3″]

Comments

loading...