ஆடி RS6 அவண்ட் ஜூன் 4ம் தேதி முதல் இந்தியாவில்

ஆடி A6 அவண்ட் காரின் பெர்ஃபாமன்ஸ பதிப்பான ஆடி RS6 அவண்ட் கார் இந்தியாவில் வரும் ஜூன் 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Audi%2BRS6%2BAvant ஆடி RS6 அவண்ட் ஜூன் 4ம் தேதி முதல் இந்தியாவில்

ஆடி நிறுவனத்தின் ஆடி TT மேம்படுத்தப்பட்ட மாடல் மற்றும் ஆடி RS7 மேம்படுத்தப்பட்ட மாடல்களை தொடர்ந்து ஆடி RS6 அவண்ட் விற்பனைக்கு வருகின்றது.

எஸ்டேட் மாடல் காரான ஆடி  ஆர்எஸ்6 அவண்ட் 552பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4.0 லிட்டர் வி8 டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 8 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

0-100கிமீ வேகத்தினை எட்டுவதறக்கு 3.9 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆடி  RS6 அவண்ட் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 304கிமீ ஆகும்.

சிலிக் முகப்பு விளக்குகள் மற்றும் பகல் நேர எல்இடி விளக்குகளை கொண்டுள்ளது. மிக அதிகப்படியான இடவசதி , ஸ்போர்ட்டிவ் தோற்றம் மற்றும் பெர்ஃபாமன்ஸ் கொண்ட மாடலாக ஆர்எஸ்6 அவண்ட் விளங்கும் என்பதால் மிக சிறப்பான வரவேற்பினை பெறும்.

Audi%2BRS6%2BAvant%2Brear ஆடி RS6 அவண்ட் ஜூன் 4ம் தேதி முதல் இந்தியாவில்
loading...
0 Shares
Share
Tweet
+1
Pin