ஆப்பிள் கார் எப்பொழுது வரும் ?

ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்த செய்தி தற்பொழுது உறுதியாகியுள்ளது ஆப்பிள் எல்க்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் கார்
ஆப்பிள் கார்

ஆப்பிள் நிறுவனத்தின்  புதிய கார் இன்னும் நான்கு வருடங்களில் அதாவது 2019 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய காரினை முன்னனி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் முதல் அதிகாரிகளை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளதாம்.

என்ன மாதிரியான ஆப்பிள் கார்

ஆப்பிள் நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் ஓட்டுநர் இல்லாதா ஆட்டோமேட்டிக் காராக இருக்கலாம் அல்லது ஓட்டுநர் உதவியுடன் கூடிய தானியங்கி காராகவும் இருக்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் புதிய கார் தயாரிப்பிற்க்கு 600 முதல் 1800க்கு மேற்பட்ட பொறியாளர்களை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாம். இதற்க்காக ஃபியட் கிறைஸலர் , தெஸ்லா மோட்டார் ,  ஃபோர்டு , ஃபோக்ஸ்வேகன் மற்றும் பிஎம்டபிள்யூ  போன்ற முன்னனி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள்  பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது.

டெஸ்ட் டிராக்

புதிய காருக்காக ஆப்பிள் நிறுவனம் ரகசிய சோதனை ஓட்ட மையத்தை தேர்ந்தெடுக்க உள்ளதாம் . இதற்க்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லா கார்களுக்கான சோதனை மையத்தை தேர்வு செய்துள்ளதாம்.

எப்பொழுது வரும்

ஆப்பிள் கார் இன்னும் 4 வருடங்களில் சந்தைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிகின்றன.

பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பதில் தீவரமாக உள்ளது மட்டும் உறுதியாகியுள்ளது.

Apple car expect to launch on 2019