ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ K10 கார்களில் ஓட்டுனர் ஏர்பேக் ஆப்ஷன்

மாருதி சுசூகி நிறுவனம் தனது அனைத்து மாடல்களிலும் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து வருகின்றது. அந்த வரிசையில் ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ K10 என இரு மாடல்களிலும் ஓட்டுனர் காற்றுப்பை ஆப்ஷனை கொடுத்துள்ளது.

maruti-alto-800-airbag-1 ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ K10 கார்களில் ஓட்டுனர் ஏர்பேக் ஆப்ஷன்

பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் மாருதி நிறுவனம் தனது முக்கிய மாடல்களான சியாஸ் , எர்டிகா , ஸ்விஃப்ட் , டிசையர் மற்றும் செலிரோயோ போன்ற கார்களில் முன்பக்க இரட்டை காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ் , இபிடி போன்றவை ஆப்ஷனலாக வந்துள்ளது. மேலும் பலேனோ , எஸ் க்ராஸ் காரில் முன்பக்க இரட்டை காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ் , இபிடி போன்றவை நிரந்தர அம்சமாக உள்ளது. இதன வரிசையில் இந்தியாவின் அதிகம் விற்பனை ஆகும் ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ K10 கார்களில் ஓட்டுனர் காற்றுப்பை ஆப்ஷனலாக வந்துள்ளது.

ஆல்டோ 800 காரில் 47.3bhp ஆற்றல் மற்றும் 69Nm வழங்கும் 796 சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. ஆல்டோ K10 காரில் 67.1bhp ஆற்றல் மற்றும் 90Nmவழங்கும் 998 சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. பெட்ரோல் மாடல் தவிர கம்பெனி ஃபிட்டிங் சிஎன்ஜி ஆப்ஷனும் உள்ளது.

இந்தியாவிலே அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையுடன் விளங்கும் ஆல்டோ சீரிஸ் கார் இதுவரை ஒட்டுமொத்தமாக 29 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.

மாருதி ஆல்டோ விலை விபரம்

மாருதி ஆல்டோ 800 STD(O): ரூ. 2.62 லட்சம்

மாருதி ஆல்டோ 800 LX(O): ரூ. 2.99 லட்சம்

மாருதி ஆல்டோ 800 LXi(O): ரூ. 3.21 லட்சம்

மாருதி ஆல்டோ 800 LXi CNG(O): ரூ. 3.78 லட்சம்

மாருதி ஆல்டோK10 விலை விபரம்

மாருதி ஆல்டோ K10 LXi(O): ரூ. 3.46 லட்சம்

மாருதி ஆல்டோ K10 VXi AGS(O): ரூ. 4.11 லட்சம்

மாருதி ஆல்டோ K10 LXi CNG(O): ரூ. 4.08 லட்சம்

( அனைத்து விலையும் டெல்லி எக்ஸ்ஷோரூம் )

loading...
24 Shares
Share24
Tweet
+1
Pin