இந்தியன் டிசைன் மார்க் விருது வென்ற மஹிந்திரா ஸ்கூட்டர்

மஹிந்திரா இருசக்கர பிரிவு நிறுவனம் இந்தியாவின் வடிவமைப்பு கவுன்சில் வழங்கும் இந்தியன் டிசைன் மார்க் விருதினை பெற்றுள்ளது. மஹிந்திராவின்  ரோடியோ ஆர்இசட் மற்றும் டியூரோ ஆர்இசட் ஸ்கூட்டர்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

Mahindra's Duro DZ and Rodeo RZ
இந்த விருதிற்க்கான தேர்வுமுறை ஆனது வடிவமைப்பு, நிலைப்பு தன்மை, தரம்,செயல்பாடு, தோற்றம், சிறப்பான உருவாக்கம் போன்ற காரானிகளை மையமாக வைத்து இந்த விருது இந்தியா டிசைன் கவுன்சில் வழங்குகின்றது.
இந்தியன் டிசைன் மார்க் விருது பெற்ற பொழுது மஹிந்திராவின் சீனயர் வைஸ் பிரிசிடென்ட் மற்றும் தலைமை அதிகாரி பி.எஸ் ஆசோக் கூறுகையில்..
இந்தியா டிசைன் கவுன்சில் விருதினை மிக பெரிய கவுரவமாக நினைக்கிறோம். மேலும் இந்த விருதானது உலகமுழுவதும் மஹிந்திரா ஸ்கூட்டரை எடுத்து செல்ல முடியும்.
ரோடியோ ஆர்இசட் மற்றும் டியூரோ ஆர்இசட் ஸ்கூட்டர்கள் இரண்டும் 124.6 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8.1பிஎஸ் ஆகும்.

Comments