இந்தியன் ரோட்மாஸ்டர் பைக் இந்தியாவில்

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் ரோட்மாஸ்டர் டூரர்  ரக பிரிவின் சொகுசு ரோட்மாஸ்டர் பைக் ரூ.37 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ரோட்மாஸ்டர் பைக்

மிகவும் சக்திவாய்ந்த என்ஜின், பிரமாண்டமான தோற்றம், பல்வேறு விதமான நவீன வசதிகள் மற்றும் நீண்ட தொலைவு பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சொகுசு வசதிகளை தாங்கி விற்பனைக்கு வந்துள்ள ரோட்மாஸ்டர் பைக் முழு விபரத்தினை கானலாம்.

இந்தியன் மோட்டார்சைக்கிள் ரோட்மாஸ்டர் பைக்கில் 1811சிசி 4ஸ்டோர்க் வி-டிவின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ரோட்மாஸ்டரில் வின்ட்ஷீல்ட் கண்ணாடி கொடுத்துள்ளனர் . இந்த கண்ணாடி எதிர்வரும் வாகனங்களின் ஒளி மற்றும் சூரிய ஒளி நேரடியாக கண்களை உறுத்தாத வகையில் உருவாக்கியுள்ளனர். மேலும் தேவையான பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியன் மோட்டார்சைக்கிள்
ads

இருக்கைகளை மற்றும் கைப்பிடியை சூடாக்கி கொள்ளும் வசதி, 140லிட்டர் லக்கேஜ் வசதி, கீலெஸ் ஸ்டார்ட் , எல்இடி விளக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல், தொலைவான பயனத்தின் பொழுது கால்களுக்கு சிறப்பான ஓய்வினை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபூட் போர்டு, 200 வாட் ஸ்டீரியோ ஆடியோ அமைப்பு, டயர் அழுத்தம் அறிந்துகொள்ள மானிட்டர், ரீமோட் லாக், ஏபிஎஸ் அமைப்பு போன்றவை குறிப்பிடதக்க அம்சங்களாகும்.

இந்தியன் ரோட்மாஸ்டர் பைக் விலை ரூ.37 லட்சம் (ex-showroom delhi)

Indian Motorcycle Roadmaster

Comments