இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி க்ரூஸர் பைக் அறிமுகம் – EICMA 2015

புதிய தொடக்க நிலை இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி க்ரூஸர் பைக் EICMA 2015 மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் பார்வைக்கு வந்துள்ளது. குறைவான விலையில் வரவுள்ள  இந்தியன் ஸ்கவுட் மாடலாகும்.

2016-indian-scout-sixty-bikes

1130சிசி வி – ட்வீன் என்ஜினுக்கு பதிலாக 999சிசி என்ஜினை பெற்றுள்ள ஸ்கவுட் சிக்ஸ்டி இந்தியாவிற்க்கு அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

78 ஹெச்பி ஆற்றல் மற்றும் 88.8என்எம் டார்க் வெளிப்படுத்தும் வி ட்வீன் 999சிசி லிக்யூடு கூல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

loading...

முன்பக்கத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் இரண்டு சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. மேலும் முன் மற்றும் பின்பக்கத்தில் 298மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக உள்ளது.

தன்டர் பிளாக் , இந்தியன் மோட்டார்சைக்கிள் ரெட் மற்றும் பேல் வெள்ளை என மூன்று விதமான வண்ணங்களில்  இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி கிடைக்கும்.

2016-indian-scout-sixty-red

2016-indian-scout-sixty-side

ரூ.6 லட்சம் விலையில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட உள்ள இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி க்ரூஸர் பைக் இந்தியாவில் முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளதால் ரூ. 10 லட்சத்தினை தொடும்.

தற்பொழுது இத்தாலியின் மிலன் நகரில் இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி க்ரூஸர் பைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

2016-indian-scout-sixty-white

2016-indian-scout-sixty

2016-indian-scout-sixty-rear

2016 Indian Motorcycle Scout Sixty unveiled at EICMA 2015 Motor Cycle Show

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin