இந்தியாவின் முதல் ஹாட் ராட் ஃபெஸ்ட்

இந்தியாவின் முதன்முறையாக ஹாட் ராட் ஃபெஸ்ட் டைடர்ஸ் கோப்பை வரும் ஜூலை 25 மற்றும் 26 நடைபெற உள்ளது. இந்தியாவில் ஹாட் ராட் ஃபெஸ்ட் அறிமுகம் செய்பவர் அர்ஜூனா விருது பெற்ற பைக் ரேஸர் தீபா மாலிக் ஆகும்.

நமது விருப்பத்திற்க்கு ஏற்ப பைக் மற்றும் 4×4 வாகனங்களை மாற்றியமைக்கப்பட்ட அதாவது கஸ்டம் செய்யப்படுவதற்க்கான ஆர்வத்தினை அதிகரிக்கும் வகையில் இந்த ரைட் டெல்லி சவுத்-எக்ஸ் முதல் சைபர் சிட்டி வரை நடைபெறுகின்றது. இந்த ரைடில் 150க்கு மேற்ப்பட்ட ரைடர்கள் பங்கேற்க்க உள்ளனர்.
இந்த போட்டியில் மொத்தம் 5 பிரிவுகளில் பரிசு வழங்கப்படுகின்றது. அவை ஆண்டின் சிறந்த ரைடிங் குழு , பாதுகாப்பு அம்சங்களை கொண்ட சிறந்த குழு , ஆண்டின் சிறந்த நிர்வாகி , ஆண்டின் சிறந்த தனி நபர் ரைடர் மற்றும் சிறந்த ரைடிங் குழு உறுப்பினர்கள் ஆகும்.
ஹாட் ராட் விழாவில் கஸ்டம் பைக்குகளும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இந்த விழா புத் இன்ட்ர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெறுகின்றது.  இந்த விழாவினை வழங்குபவர்கள் ஐபாக்ஸ் ஸ்டூடியோஸ்.

மேலும் விபரங்களுக்கு ; http://indiahotrodfest.com/

Comments