இந்தியாவின் விலை உயர்ந்த டாப் 10 பைக்குகள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தை வளர்ச்சி மிக சிறப்பான பாதையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்தியாவில் விற்பனையில் உள்ள பைக்குகளில் விலை உயர்ந்த முதல் 10 பைக்குகளை கானலாம்.

10. பிஎம்டபிள்யூ 1600

பத்தாமிடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ 1600 பைக்கில் இரண்டு விதமான வேரியண்ட் உள்ளது. இரண்டிலும் 160பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 6 சிலிண்டர் கொண்ட 1649சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  பிஎம்டபிள்யூ 1600 பைக் வேகம் மணிக்கு 201கிமீ ஆகும். பிஎம்டபிள்யூ 1600 மைலேஜ்  லிட்டருக்கு 22கிமீ ஆகும்.

Ads

பிஎம்டபிள்யூ 1600 GT பைக் விலை ரூ.23.20 லட்சம்
பிஎம்டபிள்யூ 1600 GTL பைக் விலை ரூ.25.52 லட்சம்

பிஎம்டபிள்யூ 1600 பைக்
பிஎம்டபிள்யூ 1600 பைக்

9. யமஹா விமேக்ஸ்

உலகின் பிரபலமான க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றான யமஹா விமேக்ஸ் 197பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1649சிசி லிக்யூடூ கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. யமஹா விமேக்ஸ் பைக் டாப் ஸ்பீடு மணிக்கு 220கிமீ ஆகும். யமஹா விமேக்ஸ் மைலேஜ்  லிட்டருக்கு 14கிமீ ஆகும்.

யமஹா விமேக்ஸ் பைக் விலை ரூ.24 லட்சம்

யமஹா விமேக்ஸ்
யமஹா விமேக்ஸ் பைக்

8. இந்தியன் சீஃப் கிளாசிக்

மிகவும் சக்திவாய்ந்த இந்தியன் சீஃப் கிளாசிக் க்ருஸர் பைக் கிளாசிக்கான தோற்றத்துடன் 100பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1811சிசி தன்டர் ஸ்ட்ரோக் 111 என்ஜின் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தியன் சீஃப் கிளாசிக் பைக் விலை ரூ.26.50 லட்சம்

இந்தியன் சீஃப் கிளாசிக்
இந்தியன் சீஃப் கிளாசிக்

7.  ஹோண்டா கோல்டு விங் 

மிக சிறப்பான டூரிங் ரக ஹோண்டா கோல்டு விங் GL 1800 பைக்கில் இரண்டு விதமான வேரியண்ட்கள் உள்ளன. 116பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1832சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். ஹோண்டா கோல்டு விங் மைலேஜ்  லிட்டருக்கு 18கிமீ ஆகும்.

ஹோண்டா கோல்டு விங் GL 1800 ஆடியோ பைக் விலை ரூ.28.50 லட்சம்
ஹோண்டா கோல்டு விங் GL 1800 ஏர்பேக் பைக் விலை ரூ.31.50 லட்சம்

ஹோண்டா கோல்டு விங்
ஹோண்டா கோல்டு விங் 

6.யமஹா YZF R1

பெர்ஃபாமென்ஸ் ரக ஸ்போர்ட்டிவ் யமஹா YZF R1 பைக்கில் 197பிஎச்பி ஆற்றலை தரவல்ல 998சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. யமஹா YZF R1 பைக் வேகம் மணிக்கு 285கிமீ ஆகும். யமஹா YZF R1 மைலேஜ்  லிட்டருக்கு 20கிமீ ஆகும்.

யமஹா YZF R1 பைக் விலை ரூ.29.43லட்சம்

யமஹா YZF R1 பைக்

5. இந்தியன் சீஃப் வின்டேஜ்

மிக சிறப்பான பழைய தோற்றத்தில் விளங்கும் இந்தியன் சீஃப் வின்டேஜ் பைக்கில் 98பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1811சிசி என்ஜின் பொருத்தியுள்ளனர்.

இந்தியன் சீஃப் வின்டேஜ் பைக் விலை ரூ. 29.50 லட்சம்

இந்தியன் சீஃப் வின்டேஜ்

4. ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் கிளைட் ஸ்பெஷல்

டூரிங் ரக ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் கிளைட் ஸ்பெஷல் பைக்கில் 1690சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர்.  ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் கிளைட் மைலேஜ்  லிட்டருக்கு 20கிமீ ஆகும்.

ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் கிளைட் பைக் விலை ரூ.29.70 லட்சம்

ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் கிளைட்

3. இந்தியன் சீஃப்டெயின்

பெர்ஃபாமென்ஸ் மற்றும் பல நவீன அம்சங்கள் கொண்ட இந்தியன் சீஃப்டெயின் பைக்கில்  1811சிசி என்ஜின் பொருத்தப்பட்டள்ளது.

இந்தியன் சீஃப்டெயின் பைக் விலை ரூ. 33 லட்சம்

இந்தியன் சீஃப்டெயின் பைக்
இந்தியன் சீஃப்டெயின் பைக்

2. இந்தியன் ரோட்மாஸ்டர்

பெர்ஃபாமென்ஸ் , ஸ்டைல் பல நவீன அம்சங்கள் என பல சிறப்புகளை கொண்ட இந்தியன் ரோட்மாஸ்டர் பைக்கில் 1811சிசி என்ஜின் பொருத்தப்பட்டள்ளது.

இந்தியன் ரோட்மாஸ்டர் பைக் விலை ரூ.34.95 லட்சம்

இந்தியன் ரோட்மாஸ்டர் பைக்
இந்தியன் ரோட்மாஸ்டர் பைக்

1. ஹார்லி டேவிட்சன் CVO லிமிட்டேட்

மிகவும் சிறப்பான ஸ்டைல் மற்றும் சகதிவாய்ந்த என்ஜின் என அனைத்திலும் பட்டைய கிளப்பும் ஹார்லி டேவிட்சன் CVO லிமிட்டேட் பைக்கில் 1801சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் CVO லிமிட்டேட் பைக் விலை ரூ.49.23லட்சம்

ஹார்லி டேவிட்சன் CVO
ஹார்லி டேவிட்சன் CVO
உங்களுக்கு எந்த பைக் பிடிச்சிருக்கு.. கண்டிப்பாக கமென்ட் பன்னுங்க அது…கண்டிப்பாக அந்த பைக்கினை நீங்கள் வாங்க வாழ்த்துக்கள்..

Comments