இந்தியாவில் மஸராட்டி கார்கள் ஜூலை 15 முதல்

இந்தியாவில் மஸராட்டி கார்கள் வரும் ஜூலை 15ந் தேதி முதல் மீண்டும் விற்பனைக்கு வருகின்றது.  குவாட்ரோபோர்ட்டே , கிரான் டூரீஷ்மோ மற்றும் கிரான் கேப்ரியோ கார்கள் முதற்கட்டமாக களமிறங்குகின்றது.

மஸராட்டி கிரான் டூரீஷ்மோ
மஸராட்டி கிரான் டூரீஷ்மோ ஸ்போர்ட்

மிக சிறப்பான சொகுசு வசதிகளை கொண்ட மஸராட்டி ஸ்போர்ட்டிவ் கார்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2 கதவுகளை கொண்ட ஸ்போர்ட் கூபே ரக கிரான் டூரீஷ்மோ மற்றும் கிரான் கேப்ரியோ கன்வெர்டிபிள் மாடலில் 4.2 லிட்டர் மற்றும் 4.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என இரண்டு ஆப்ஷனில் உள்ளது.

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே
மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே

குவாட்ரோபோர்ட்டே சொகுசு செடான் காரில் 3.0 லிட்டர் மற்றும் 3.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு வரலாம்.

முதற்கட்டமாக டெல்லியில் தனது சேவை மையத்தை தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்த மும்பையில் தொடங்க உள்ளது. ஃபெராரி கார்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் நுழைந்தது நினைவிருக்கலாம்.

மஸராட்டி கிரான் கேப்ரியோ
மஸராட்டி கிரான் கேப்ரியோ ஸ்போர்ட்

Maserati To Announce Official India Entry