இந்தியா கிராஷ் டெஸ்ட் சோதனை எப்பொழுது – Bharat NCAP

குளோபல் என்சிஏபி தர கிராஷ் டெஸ்ட் சோதனையில் அனைத்து இந்திய கார்களும் ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கினை பெற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இந்தியா கிராஷ் டெஸ்ட் மையம் விரைவில் காட்சிக்கு வரவுள்ளது.

Mahindra-Scorpio-Global-NCAP-crash-test-1024x682 இந்தியா கிராஷ் டெஸ்ட் சோதனை எப்பொழுது - Bharat NCAP

 

மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய கார் சந்தையில் விற்பனை ஆகின்ற கார்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் புதிய கார்களுக்கான க்ராஷ் டெஸ்ட் சோதனை மையத்தினை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நிறுவி வருகின்றது.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைச் செயலாளர் அபய் தாம்லே கூறுகையில் , அடுத்த 10 நாட்களில் இந்தியாவுக்கான கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் மற்றும் சோதனை மையத்தினை வெளியிட வாய்புள்ளதாக தெரிகின்றது.

பாரத் புதிய கார் பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டம்  ( Bharat NCAP – Bharat New Car Assessment Program) என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும் இதன் முழுபெயர் பாரத் புதிய வாகன பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டம் (Bharat New Vehicle Safety Assessment Programme – BNVSAP ) என அதிகார்வப்பூர்வமாக இருக்கலாம்.

சர்வதேச என்சிஏபி அமைப்பு கார்களை மணிக்கு 64 கிமீ வேகத்தில் சோதனை செய்து வருகின்றது. இந்திய விதிகளின்படி மணிக்கு 56 கிமீ வேகத்தில் சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்பட்டாலும் முழுமையான பயன்பாட்டுக்கு அக்டோபர் 2017யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin