டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா கார் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – updated

சொகுசு காருக்கு இணையாக போற்றப்படும் டொயோட்டா இன்னோவா காரின் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா கார் உள்ள முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்துகொள்ளவோம்.

toyota-innova-crysta-fr

 

சரி நிகரான நேரடியான போட்டியாளர்கள் என எந்த காரும் இல்லாத வகையில் மிக சிறப்பான பாதுகாப்பு மற்றும் தரத்தினை கொண்டு கடந்த 11 வருடங்களுக்கு முன்னதாக பிரசத்தி பெற்ற டொயோட்டா குவாலிஸ் காருக்கு மாற்றாக இன்னோவா எம்பிவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

loading...

கடந்த 11 வருடங்களில் பெரிய அரசியல் தலைவர்கள் , பணக்காரர்கள் , டாக்சி என அனைத்து தரப்பு மக்களிடமும் சிறப்பான பாதுகாப்பு மற்றும் தரம் போன்றவற்றால் 6 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்க்கும் மாடலாக இன்னோவா விளங்குகின்றது.

இன்னோவா க்ரீஸ்ட்டா கார் பற்றி தெரிந்துகொள்ளவேண்டியவை ;

 1. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் முந்தைய மாடலைவிட கூடுதலான கம்பீரத்தினை பெற்று சிறப்பான நவீன வடிவ தாத்பரியங்களுடன் உறுதிமிக்க பாகங்களுடன் சிறப்பான மாடலாக க்ரீஸ்டா வந்துள்ளது.
 2. பெரிய வேன் போல காட்சியளிக்கும் புதிய இன்னோவா கார் அதிக நீளம் (4735மிமீ) , அகலம் (1830மிமீ) மற்றும் உயரத்தினை (1795மிமீ) பெற்றிருந்தாலும் வீல்பேஸ்(2750மிமீ) எந்த மாற்றமும் இல்லாமல் இடம்பெற்றுள்ளது.
 3. மிகவும் நேர்த்தியாக மரபேனல்களை கொண்டு கட்டமைக்கப்பட்ட பல நவீன வசதிகளை பெற்றுள்ள டேஸ்போர்டில் தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தினை பெற்றுள்ளது. 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷனில் கிடைக்கின்றது.
 4. தற்பொழுது பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் வரவில்லை.
 5. இரு டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷினை பெற்றுள்ளது.
 6.  பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷினை பெற்றுள்ளது.
 7. மேலும் நார்மல் , இக்கோ மற்றும் பவர் என மூன்று விதமான டிரைவிங் மோடினை பெற்றுள்ளது.
 8. 150hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4லிட்டர் என்ஜின் டார்க் 343 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ ஆகும்.
 9. 174hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் என்ஜின் டார்க் 360 Nm ஆகும். இதில்  6 வேக ஆட்டோமேட்டிக் இடம் பெற்றிருக்கும். 2.8 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 14.29 கிமீ ஆகும்.
 10. 166 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் டார்க் 245Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இன்னோவா ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 10.83 கிலோமீட்டர் இன்னோவா பெட்ரோல் மெனுவல் 9.89 கிலோமீட்டர் ஆகும்.
 11.  தோற்றம் , ஸ்டைல் , வசதிகள் , முந்தைய சொகுசு தன்மையை விட மேம்படுத்தப்பட்ட இருக்கை அமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் என பலவற்றில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வேரியண்டிலும் 3 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் நிரந்தரமாக உள்ளது.
 12. டாப் வேரியண்டில் 7 காற்றுப்பகைள் , வாகனம் நிலைப்புதன்மை , மலையேற உதவி அமைப்பு போன்றவை கொண்டுள்ளது.
 13.  புதிய தலைமுறை இன்னோவா க்ரீஸ்ட்டா கார் முந்தைய தலைமுறை மாடலை விட ரூ.4.50 லட்சம் கூடுதலாக அமைந்துள்ளது. டொயோட்டா என்றால் பாதுகாப்பு , தரம் மற்றும் சொகுசு போன்றவற்றால் விலை பெரிதாக தெரிய வாய்ப்பில்லை.

toyota-innova-touchsreen

டொயோட்டா இன்னோவோ க்ரீஸ்ட்டா கார் விலை பட்டியல்

வரிசை  வேரியண்ட் விபரம்  இருக்கை      எக்ஸ்ஷோரூம் விலை
1 2.4 G MT     7
  ruppaiya-icon 14,13,195
2 2.4 G MT    8
  ruppaiya-icon 14,17,695
3 2.4 GX MT    7
  ruppaiya-icon 15,06,057
4 2.4 GX MT    8
 ruppaiya-icon 15,10,557
5 2.4 VX MT    7
 ruppaiya-icon 17,93,084
6 2.4 VX MT    8
 ruppaiya-icon 17,97,584
7 2.4 ZX MT    7
 ruppaiya-icon 19,87,518

இன்னோவா க்ரீஸ்ட்டா ஆட்டோமேட்டிக் விலை விபரம்

வரிசை வேரியண்ட் விபரம் இருக்கை எக்ஸ்ஷோரூம் விலை
1 2.8 GX AT 7
ruppaiya-icon 16,36,057
2 2.8 GX AT 8
ruppaiya-icon 16,40,557
3 2.8 ZX AT 7
ruppaiya-icon 21,17,518

 

இன்னோவா க்ரீஸ்ட்டா கார் பெட்ரோல் விலை

வ.எண் மாடல் இருக்கை விலை
1 2.7 GX MT 7
ruppaiya-icon 13,94,057
2 2.7 GX MT 8
ruppaiya-icon 13,98,557
3 2.7 VX MT 7
ruppaiya-icon 16,81,084
4 2.7 GX AT 7
ruppaiya-icon 15,05,057
5 2.7 GX AT 8
ruppaiya-icon 15,09,557
6 2.7 ZX AT 7
ruppaiya-icon 19,86,518

AT- Automoatic Transmission

MT – Manual Transmission

{ அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் }

loading...
144 Shares
Share144
Tweet
+1
Pin