இன்று முதல் 10 நாட்களுக்கு ஹூண்டாய் கார்களுக்கு இலவச சர்வீஸ் முகாம்

ஹூண்டாய் கார்களுக்கு இன்று முதல் 10 நாட்களுக்கு இலவசமாக 90 விதமான பரிசோதனைகள் செய்வதற்க்கான இலவச சர்வீஸ் முகாம் தொடங்குகின்றது.

ஹூண்டாய் எலைட் ஐ20 கார்

இந்த சிறப்பு சர்வீஸ் முகாமில் என்ஜின் , கியர்பாக்ஸ் மற்றும் முழுமையான எலக்ட்ரிக் சிஸ்டம் உள்ளிட்ட 90 விதமான பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாகவும் இவற்றில் ஏதேனும் பாகங்கள் மாற்றும் பொழுது பாகங்களுக்கும் மற்றும் வேலைக்கான கட்டனத்திலும் சிறப்பு சலுகைகளை பெற முடியும்.

இன்று முதல் 10 நாட்களுக்கு (13-22) வரை உள்ள இலவச சர்வீஸ் முகாம் 19வது முறையாக நடக்க உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க்க ஹூண்டாய் இணையத்திலோ அல்லது அப்ளிகேஷன் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. 

Comments