உங்கள் பைக்கை தினமும் சோதனை செய்வது எப்படி ?

 

உங்கள் பைக் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பது என்ன ? பைக்கில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன ? நீங்கள் அதனை தினமும் சோதனை செய்கிறீர்களா ? இந்த கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன , ஆம் இல்லை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை..!

loading...

BMW-Concept-G-310-1024x683

உங்களின் பயணத்தின் தோழனாக பயணிக்கும் பைக் பற்றி அவசியம் நீங்களே செக் செய்ய வேண்டிய முக்கிய அம்சங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

பைக் பாதுகாப்பு செக்லிஸ்ட் பற்றி தெரிந்து கொள்ளலாம்

டயர்
பைக்கின் டயரை தினமும் சோதனை செய்து திரட் பேடர்னில் உள்ள கற்கள் , ஆணிகள் போன்றவை இருந்தால் நீக்குவது மிக அவசியம். டயரின் காற்றுழுத்தத்தை டயரின் வெப்பம் மிக குறைவாக உள்ள நேரத்தில் வாரம் இருமுறை தோதனை செய்யுங்கள்.
tvs-apache-rtr-200-rear-tyre
வீல்
ஆலாய் வீல் மற்றும் ஸ்போக் வீல் என எதுவாக இருந்தாலும் அதன் தன்மையை கைகளால் சோதனை செய்யுங்கள். எங்கேனும் விரிசலோ அல்லது ஸ்போக் லூசாக இருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும்.
TVS-StaR-City-Special-Edition-Rear-Wheel
பிரேக்
என்ஜின் இதயம் என்றால் பிரேக் வாகனத்தில் பயணிப்பவருக்கான உயிர்நாடி, எனவே அவசியம் சோதனை செய்யுங்க…
r15-v.3.0-disc-brake
ஆயில்
ஆயில் மற்றும் கூலன்ட் முறையான சர்வீஸ் பல இன்னல்களை தவிர்க்க உதவும் எனவே தயாரிப்பாளர் பரிந்துரைத்த மைலேஜ்படி ஆயில் சர்வீஸ் செய்வது மிக அவசியம். அதேபோல ஆயில் லெவல் மாதம் இருமுறை செக் பன்னுங்க..
engine-oil-1024x687
எலக்ட்ரிக் சிஸ்டம்
ஜீரோ பராமரிப்பு பேட்டரிகளை பயன்படுத்துவது மிக அவசியமானதாகும். மேலும் முகப்பு விளக்குகள் , பின்புற விளக்குகள் மற்றும் இண்டிகேட்டரை தினமும் சோதனை செய்ய வேண்டும்.
Triumph-Street-Triple-S-headlight-1024x768
சஸ்பென்ஷன்
முன் ஃபோர்க்குகளை மற்றும் பின் சாக் அப்சார்பர்களை பயணித்தின் பொழுது சொகுசு தன்மையில் மாறுதல் உள்ளதா ? என்பதனை கொண்டு சோதிக்கவும்.
Bajaj-Pulsar-200NS-fr-suspension
ஸ்டாண்டு

சைட் ஸ்டாண்டு மற்றும் சென்டர் ஸ்டாண்டு இரண்டின் ஸ்பிரிங் டென்சனை சோதிப்பது அவசியம்.

bmw-f700gs-side-stand-1024x636

For more news from AutomobileTamilan, follow us on Twitter @automobiletamilan and on Facebook at facebook.com/automobiletamilan

loading...