உங்கள் வாகனம் உங்கள் விமர்சனம்- புதிய முயற்சி ஆதரவு தாருங்கள்

automobile tamilan

வணக்கம் உறவுகளே…

ஆட்டோமொபைல் தமிழன் தளம் கடந்த 11 மாதங்களாக செயல்பட்டு வருகின்றது. ஆட்டோ மொபைல் வலைதளத்தில் ஒரு புதிய முயற்சிக்கு அடித்தளம் அமைக்கவே இந்த பதிவு..

வாகனங்களின் பற்றி திறனாய்வு(reviews) செய்யும் பதிவுகளை இதுவரை வெளியிட்டதில்லை. எனவே  ரிவியூ பதிவுகளை வெளியிட முயற்சி செய்து வருகின்றேன்.அந்த வகையில் வாசகர் திறனாய்வு என்ற பெயரில் தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

உங்கள் வாகனம் உங்கள் விமர்சனம்


உங்கள் வாகனம் உங்கள் விமர்சனம் பிரிவில் உங்கள் வாகனங்களை பற்றி விமர்சனம் எழுத வாருங்கள் வாசகர்களே..இதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும் வாகனத்தின் செயல்திறன்,மைலேஜ், சிறப்பம்சங்கள் என பலவும் அனுபவத்தின் வாயிலாக புதிதாக வாகனம் வாங்க விரும்பும் நண்பர்களுக்கு பெரிதும் உதவும்..
நீங்கள் பயன்படுத்தும் எந்த வாகனம் ஆனாலும் உங்கள் பார்வையில் வாகனத்தின் விமர்சனத்தை பதிவு செய்ய வாருங்கள்..

விமர்சனத்தை உங்கள் திறனாய்வின்படி பதிவு செய்து பலர் பயன் பெற உதவுங்கள்…

ads

உங்கள் வாகனம் உங்கள் விமர்சனம் பகுதியில் உங்கள் வாகனத்தின் விமர்சனம் பதிவிட தொடர்பு கொள்ளுங்கள்..[email protected]

உங்கள் விமர்சனம் புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு தெளிவான சிந்தனை தரவே..சிறிய முயற்சி…..

அன்புடன்

ஆட்டோமொபைல் தமிழன்…..

Comments