உலகின் முதல் ஹைட்ரஜன் கார் உற்பத்தி ஆரம்பம்

உலகின் முதல் ஃபயூல் செல் கார் உற்பத்தி கொரியாவின் ஹூன்டாய் தொடங்கியது. ஐஎக்ஸ்35 என்கிற ஹைட்ரஜன் கார் சூற்றுசூழலை பாதிக்காத கார் ஆகும்.

முதல் கட்டமாக 1000 கார்களை உற்பத்தி செய்ய உள்ளது.முதல் கட்டமாக ஐரோப்பாவில் களமிறக்கப்படுகின்றது. ஐரோப்பாவில் ஹைட்ரஜன் ஃபில்லிங் ஸ்டேஷன் அமைக்கப்படும். 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம்.
hyundai ix35 fuel cell
ix35 சி- பிரிவு எஸ்யூவி பிரிவில் வெளிவரும்.  ஃபயூல் செல் ஸ்டேக் ஆனது ஹைட்ரஜனை மின்சக்தியாக மாற்றி வாகனத்தை இயக்கும். இதன் உச்சக்கட்ட வேகம் 160kph ஆகும். 12.5 விநாடிகளில் 0-100kmph தொடும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 594கீமி பயணிக்கலாம். சில விநாடிகளில்  ரீஃபில் செய்து விடலாம்.
ix35 கார் வருகிற ஜெனிவா ஆட்டோ ஷோ 2013யில் பார்வைக்கு வரும்.

Comments