உலகின் விலை உயர்ந்த மேக் டிரக் (லாரி) – ஜோஹர் சுல்தான்

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த  மாற்றிமைக்கப்பட்ட மேக் டிரக்கினை ஜோஹர் சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயில் வாங்கியுள்ளார் . மேக் சூப்பர் லைனர் டிரக்கினை சுல்தானுக்காக ஆஸ்திரேலியா மேக் பிரிவு மாற்றிமைத்துள்ளது.

sultan-mack-truck- உலகின் விலை உயர்ந்த மேக் டிரக் (லாரி) - ஜோஹர் சுல்தான்

வால்வோ குழுமத்தின் கீழ் செயல்படும் அமெரிக்காவின் பழமையான மேக் நிறுவனம் டிரக் மற்றும் பேருந்துகளை தயாரித்து வருகின்றது. மலேசியாவின் ஜோஹர் மாகாண சுல்தான் இப்ராஹிம்  இஸ்மாயில் விருப்பத்திற்க்கு ஏற்ப சூப்பர் லைனர் டிரக்கினை மாற்றியமைத்துள்ளது.

ஆஸ்திரேலியா மேக் டிரக் பிரவில் உருவான கஸ்டமைஸ் செய்யப்பட்ட சூப்பர் லைனர் டிரக்கில் பல நவீன அம்சங்களுடன் உச்சகட்ட சொகுசு அம்சங்களை இந்த டிரக் பெற்றுள்ளது.

world-most-expensive-truck-golden-tiger உலகின் விலை உயர்ந்த மேக் டிரக் (லாரி) - ஜோஹர் சுல்தான்
தங்க புலி

சூப்பர் லைனர் டிரக்கில் பல சிறப்பம்சங்களை இணைத்துள்ளனர். அவை

  • கட்டி தங்கத்தால் செய்யப்பட்ட புலி சிலை முன்பக்க பானெட்டில் உள்ளது.
  • ஜோஹர் மாகன அரசு கொடியின் வண்ணத்தில் அமைந்திருப்பத்து இந்த டிரக்கின் சிறப்பாகும்
  • மேக் டிரக் வாகனத்தை முழுமையாக சுற்றி பார்க்கும் வகையில் 6 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
  • லெதர் இருக்கைகள் ,சோபா செட் , கல் பதிக்கப்பட்ட சமையலறை ,இரண்டு ப்ளாட் ஸ்கிரீன் தொலைக்காட்சிகள் , சோனி பிளே ஸ்டேஷன் போன்றவற்றை பெற்றுள்ளது.
  • இரண்டு படுக்கை வசதி , தங்க நூல்களால் 72,000 முறை ஸ்டீச் செய்யப்பட் இருக்கையை கொண்டுள்ளது.
  • பின்புறத்தில் இரண்டு குடைகளுடன் கூடிய மேஜை போன்றவை உள்ளது.
  • 658 ஹெச்பி ஆற்றலை வழங்கும் என்ஜின் பொருத்தபட்டுள்ளது.
  • இதற்க்கு முன்பாக உலகிலேயே விலை உயர்ந்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட ரிக் டிரக்கின் விலை $481,000 (ரூ.31,33,23,159)ஆகும். இந்த டிரக்கை விட விலையில் பல மடங்கு கூடுதலாக இருக்குமாம். விலை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

world-most-expensive-mack-truck உலகின் விலை உயர்ந்த மேக் டிரக் (லாரி) - ஜோஹர் சுல்தான்
ஜோஹர் சுல்தான்

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் ஜோஜர் சுல்தான் பார்பதற்க்காக கடந்த சில வாரங்களுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று தனது வாழ்நாளின் முக்கிய கனவாக கருதப்பட்ட டிரக்கினை பார்வையிட்டுள்ளார்.

டிரக்கினை பார்வையிட்ட பின்னர் தான் எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பாக கஸ்டமைஸ் செய்துள்ளனர். இது என் வாழ்நாளின் மிக பெரிய கனவு என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஆஸ்திரேலியா பொறியாளர்கள் மிக திறமையானவர்கள் என்பதனை நிருபிக்கும் ஹோல்டன் கார்களை வைத்துள்ளேன என ஜோஹர் சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

sultan-mack-truck-see உலகின் விலை உயர்ந்த மேக் டிரக் (லாரி) - ஜோஹர் சுல்தான்
ஜோஹர் சுல்தான் (வலது)

ஜோஹர் சல்தான் இந்த டிரக்கினை அடுத்த மாதம் முதன்முறையாக தன் சொந்த நாட்டில் ஓட்டி பார்க்க உள்ளார். இன்னும் ஒரு மாதத்திற்க்குள் ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பல் வழியாக மலேசியா வரவுள்ளது.

world-most-expensive-mack-truck-driver-cabin உலகின் விலை உயர்ந்த மேக் டிரக் (லாரி) - ஜோஹர் சுல்தான்

world-most-expensive-mack-truck-kitchen உலகின் விலை உயர்ந்த மேக் டிரக் (லாரி) - ஜோஹர் சுல்தான்

world-most-expensive-mack-truck-seat உலகின் விலை உயர்ந்த மேக் டிரக் (லாரி) - ஜோஹர் சுல்தான்

sultan-mack உலகின் விலை உயர்ந்த மேக் டிரக் (லாரி) - ஜோஹர் சுல்தான்

world-most-expensive-mack-truck-rear உலகின் விலை உயர்ந்த மேக் டிரக் (லாரி) - ஜோஹர் சுல்தான்

World’s most expensive Mack truck unveiled ..Mack truck has been delivered to Malaysia’s Sultan  of Johor.

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin