உ.பி. மனித கழிவில் இயங்கும் பேருந்து

உத்திரப் பிரதேச மாநிலத்தில் மனித கழிவு மற்றும் வீட்டு கழிவு பொருட்களை கொண்டு இயங்கும் பேருந்தை இயக்க உ.பி. அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

human%2Bwaste%2BBio%2BBus

பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளுக்கு மாற்றான எரிபொருளில் வாகனங்களை இயக்குவதற்க்கு ஆட்டோமொபைல் தயாரிப்பார்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

loading...

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்கேனியா பஸ் தயாரிப்பு நிறுவனம் முதன்முறையாக இங்கிலாந்தில் மனித கழிவினை கொண்டு இயங்கும் பேருந்தை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து ஸ்வீடன் , இத்தாலி , போலந்து , போன்ற நாடுகளில் இயக்கப்படுகின்றது.

இந்தியாவில் முதல்முறையாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரில் அதிகப்படியான கழிவுகள் வெளியேற்ப்படுவதனால் அங்கு இந்த பேருந்துகளை இயக்க திட்டமிட்டு வருகின்றனர்.

100 மனிதர்களின் கழிவினை கொண்டு 200கிமீ வரை பேருந்துகளை இயக்க முடியும். ஸ்கானியா நிறுவனம் இதன் மூலம் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.65 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது  உ.பி. அரசு போக்குவரத்து கழகம் (UPSRTC) எத்தனால் மூலம் இயங்கும் பேருந்துகளை இயக்குவதற்க்கான முயற்சியில் தீவரமாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் எத்தனால் மூலம் இயங்கும் பேருந்துகளை லக்னோ முதல் ஆக்ரா வரை தொடங்க உள்ளது.

UPSRTC planned to launch human waste powered  buses

loading...
Tags: