எக்ஸ்ஷோரூம் விலை , ஆன்ரோடு விலை – வித்தியாசம் என்ன

பைக் , கார் என எந்த வாகனம் வாங்க சென்றாலும் எக்ஸ்ஷோரும் விலை , ஆன்ரோடு விலை என் சொல்லுவார்கள் அப்படினா என்ன ? இரண்டுக்கும் வித்தியாசம் என்ன இந்த செய்தி தொகுப்பில் கானலாம்.

TOYOTA Land Cruiser Prado
TOYOTA Land Cruiser Prado

எக்ஸ்ஷோரூம் விலைக்கு முன்னதாக எக்ஸ்ஃபேக்டரி விலை உண்டு அதாவது ஒரு வாகனம் முழுதாக தயாராகி வெளிவரும் பொழுது உற்பத்தி நிலையத்தில் வாகனத்தின் விலையே எக்ஸ்ஃபேக்ட்ரி ஆகும்.

எக்ஸ்ஷோரூம் என்றால் என்ன ?

எக்ஸ்ஷோரூம் என்றால் வாகனத்தின் விலை உற்பத்தி நிலையத்திலிருந்து சேவை மையத்திற்க்கு அதாவது டீலருக்கு வந்து சேருவதற்க்கான வாகன செலவு போன்றவற்றை கூட்டினால் வருவதே எக்ஸ்ஷோரூம் விலை ஆகும்.

ஆன்ரோடு விலை என்றால் என்ன ?

ஆன்ரோடு விலை என்றால் வாகனத்தின் கடைசி பயனயாளரான வாடிக்கையாளர்கள் கையில் வருவதற்க்கு முன்தாக விதிக்கப்படும் வரி , பதிவு கட்டனம் போன்றவை அடங்கும்.

ஆன்ரோடு விலையில் மாநிலத்திற்க்கான பதிவு கட்டனம் வாழ்நாள் சாலை வரி , காப்பீடு , டீலரின் கையாளுதல் , போன்றவை கட்டாயமாகும். மேலும் அவசியமான துனை கருவிகளுக்கான கட்டனமும் சேர்க்கப்பட்டிருக்கும்.

இது மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

Difference Between EX-Showroom Price and On-Road Price