எதிர்கால பாதுகாப்பினை இந்தியா உறுதிசெய்யுமா ?

இந்தியாவில் தயாரிக்கப்படும் பல கார்கள் கிராஷ் டெஸ்ட் எனப்படும் பாதுகாப்பிற்கான சோதனையில் பூஜ்யத்தினை பெற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இந்திய கார்களில் பாதுகாப்பு இல்லையா ? ஏன் ..ஓர் சிறப்பு அலசல்

இந்தியாவில் மிகவும் பிரபலமான கார்கள் பல பூஜ்ய தரத்தினை கொண்டிருப்பதாகவே சில முக்கிய கிராஷ் டெஸ்ட் சோதனை சமீபத்தில் உறுதி செய்துள்ளது.

கிராஷ் டெஸ்ட் என்றால் என்ன ?

கிராஷ் டெஸ்ட் என்றால் வாகனத்தினை நேரடியாக வாகனத்தின் முன்பறத்தினை குறிப்பிட்ட வேகத்தில் சுவற்றில் மோத செய்து அவற்றின் சேதத்தினை வைத்து அந்த காரின் தர மதிப்பினை கணக்கீடுவார்கள். மேலும் பக்கவாட்டிலும் மோதி சோதனை செய்வர்.

கிராஷ் டெஸ்ட்
ads

அமெரிக்க விதிகளின் படி ஒரு கார் குறைந்தபட்ச வேகமாக மணிக்கு 56 கிமீ வேகத்தில் முன்புறத்திலும் பக்கவாட்டில் கதவுகளில் 50 கிமீ வேகத்திலும் மோதி சோதிப்பார்கள். ஆனால் யூரோ விதிப்படி மணிக்கு 64கிமீ வேகத்தில் முகப்பில் மோதுவார்கள்

கார்களின் இருக்கைகளில் மனிதனை போன்ற டம்மிகளை வைத்து சோதனை செய்யப்படும். டம்மிகளுக்கான அடிப்படும் விதம் மற்றும் எந்த பகுதிகளில் அதிகப்படியான அடிப்படுகின்றதோ அதை பொறுத்தே அந்த காரின் தர மதிப்பிடு நிர்னயிக்கப்படும்.

அதிகப்பட்சமான தர மதிப்பாக 5 நட்சத்திரமும் கொடுக்கப்படுகின்றது.
ஆனால் இந்தியாவிலே தயாரித்து விற்பனை செய்யப்படும் கார்களுக்கு இவ்வாறு எந்த சோதனைகளும் இதுவரை நடத்தப்படவில்லை.

பூஜ்யத்தினை பெற்ற இந்திய கார்கள்:

ஏன் இந்த சோதனை அவசியமாகின்றது என்பதனை தெரிந்து கொள்ளலாமா ? இந்தியர்களுக்காகவே தயாரிக்கப்படும் கார்கள் பல உள்ளன.

 குளோபல் என்சிஏபி சோதனை செய்த கார்களில் முக்கியமான பங்களிப்பினை அளித்து வரும்  மாருதி ஆல்டோ 800, மாருதி ஸ்விஃப்ட, ஹூண்டாய் ஐ10, டாடா நானோ ட்டசன் கோ போன்ற கார்கள் பூஜ்ய தரத்தினை கொண்டிருப்பதாகவே உறுதி செய்துள்ளது.

ஸ்விஃப்ட் கிராஷ் டெஸ்ட் வீடியோ

          

மேலும் இந்த கார்களில் ட்டசன கோ காரில் காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் பொருத்தினாலும் பாதுகாப்பு இருக்காது என உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த காரினை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலை நாட்டு கார்கள் எவ்வாறு 5 நட்சத்திர மதிப்பினை பெறுகின்றது. ஏன் இந்திய கார்கள் பெறவில்லை. ஆனால் இந்திய தயாரிப்பான ஃபோக்ஸ்வேகன் போலோ கார் 4 நட்சத்திர மதிப்பினை பெற்றுள்ளது.

ஏன் பாதுகாப்பு முக்கயம் ?


      குறைந்தபட்ச பட்ஜெட் காரினை வாங்குபவர்கள் தங்களுக்கான முதல் காரினை வாங்குபவர்களாகத்தான்  இருப்பார்கள் என்பது யோசிக்க வேண்டியுள்ளது.

இவை மேலைநாட்டின் விதிகளின்படி சோதனை செய்யப்பட்டள்ளது இந்தியாவிற்க்கு பொருந்தாது எனவும் சொல்கின்றனர். ஆனால் நம் நாட்டின் சாலைகளின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்த வருகின்றது.

எந்தவொரு காரும் 50கிமீ க்கு குறைவான வேகத்தில் பயணிப்பதில்லை குறைந்தபட்ச வேகம் 100 கிமீ ஆக உள்ளது கவனிக்க வேண்டும்.

என்ன செய்ய போகின்றது இந்தியா;

புதிய கிராஷ் சோதனைக்கான கட்டுமானத்தினை விரைவில் இந்தியா துவங்க உள்ளது. மேலும் கார்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இந்த கிராஷ் சோதனைக்கான தரத்தினை உலகத் தரத்திற்க்கு உயர்த்த உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பைக்களுக்கு ஏபிஎஸ் கட்டாயமாக்கப்படலாம் என ஆட்டோகார் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய கார்களின் தரமும் மதிப்பு இனி உயரும் என நம்பலாம்.

update:29.12.2014

வரும் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்திய கார்களுக்கு கிராஷ் டெஸ்ட் விதிகள் அமல்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி; குளோபல் என்சிஎபி

Comments