எந்த பைக் வாங்கலாம்-தொடர்ச்சி

வணக்கம் ஆட்டோமொபைல்  ரசிகர்களே….

கேள்வி பதில் பக்கத்தின் முந்தை பதிவான எந்த பைக் வாங்கலாம் பகுதியின் தொடர்ச்சிதான் இதுவும்…
QA 1ஆட்டோமொபைல்
 QA 2
automobiletamilan
 QA 3
ஆட்டோமொபைல்
இந்திய பைக் மார்க்கட்டில் 100CC-125CC பைக்கள்தான் விற்பனையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 100cc-110cc வரை 15 மாடல்களுக்கு மேலாக விற்பனையில் உள்ளது.முந்தைய பதிவில் 125CCயில் சிறப்பான மைலேஜ் தரும் பைக்களை பார்த்தோம்.
100cc வாங்கலாமா 125cc வாங்கலாமா 

100CC-110CC மற்றும் 125cc இரண்டுமே சிறப்பானதுதான்.
 100-110cc பைக் மைலேஜ் சிறப்பாக இருக்கும். 
125cc பைக்கில் மைலேஜ் சற்று குறையும் ஆனால் Performance மற்றும் Pick up 100ccயை விட சிறப்பாக இருக்கும். 
100-110cc விலை குறைவானது மைலேஜ் அதிகம்.
100-110cc பைக்களை விட 125cc பைக்கள் சற்று விலை கூடுதலானது.
Style/look முக்கியம்தான் ஆனால் அதிக முக்கியதுவம் கொடுக்க தேவையில்லை(என் கருத்து).
குறைந்தபட்ச 50-60km தூரத்திற்க்குதான் நாம் பைக் பயன்படுத்துகிறோம். நம் இந்தியாவை பொருத்தவரை மைலேஜ் பைக்கள்தான் 100-125 cc பைக்கள்தான் இந்தியாவுக்கு சிறப்பானதாக இருக்கும். 
அன்றாட அலுவலக பனிகளுக்கு பயன்படுத்துபவர்கள் மற்றும் அதிக பயனம் செய்பவர்கள் 100cc-110cc பயன்படுத்தலாம்.
கூடுதல் வேகம்(இளைஞர்கள்) மற்றும் சிறப்பான Pick-up தேவையென்றால் 125cc முயற்சிக்கலாம்.
125cc பைக்களை முயற்சிப்பவர்கள் இந்த பதிவை பார்க்க
குறைவான CC(cubic centimeters)

நிறைவுகள்

சிறப்பான மைலேஜ்

குறைவுகள்
குறைவான சக்தி மற்றும் வேகம் குறைவு.

100-110cc பைக்கள்

HERO Splendor
HONDA CB Twister
HERO CD deluxe
HERO Passion Pro
Bajaj Discover 100cc
Bajaj Platina 100cc
Yamaha YBR 110
Yamaha Crux
Suzuki Hayte (112cc)
Honda Dream Yuga
HERO வாங்கலாமா 
ஹீரோ (world no.1 Bike)இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் சிறப்பான இடத்தில் உள்ளது. ஹான்டா(Honda) பிரிந்த பின்னர் ஹீரோ சரியும் என எதிர்பார்த்தார்கள் ஆனால் ஹீரோ தன்னுடைய சிறப்பான அடிதளத்தால் விற்பனை இலக்கு நன்றாக உயர்ந்தது வருகிறது.
சிறப்பான மைலேஜ் மற்றும் சர்வீஸ் மிக அருமை.
HERO வாங்க விரும்பவர்கள்
HERO Splendor+, Hero Passion Pro
ஹீரோ ஸ்ப்ளன்டர்
100 CC பைக்களில் சிறப்பான விற்பனையில் இருப்பது ஹீரோ ஸ்ப்ளன்டர்(Hero Splendor) 1994 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் இருப்பதால் பழைய பைக் என முத்திரை பதிந்து விட்டது இருந்தாலும் மைலேஜ் அதிகம்.
Hero Splendor மாடல்கள்
hero splendor
அலாய் வீலுடன் சிறப்பான தோற்றத்தில் 11லிட்டர் எரிகலன் கொள்ளவுடன்(Fuel Tank Capacity) கிடைக்கும். 

மைலேஜ் 70kmpl

விலை: 41200
ஹான்டா வாங்கலாமா
ஹான்டா(HONDA) நிறுவனம் ஹீரோவை விட்டு வெளியேறி பின்னர் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஹான்டா என்ஜின் தயாரிப்பில் முதன்மையான நிறுவனமாகும். ஹான்டாவின் சிறப்பான தோற்றம் இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
Honda வாங்க விரும்பவர்கள்
Honda Dream Yuga, Honda CB Twister
ஹான்டா டீரீம் யுகா(Honda Dream Yuga) (splendorக்கு மாற்றாக முயற்சிக்கலாம்)முழுமையாக படிக்க 
பஜாஜ் வாங்கலாமா
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியளவில் சிறப்பான விறப்னையில் உள்ளது. பஜாஜ் டிசைன் இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஹான்டா நிறுவனத்துடன் கடும் போட்டியை சந்தித்து வருகிறது.
Bajaj வாங்க விரும்பவர்கள்
Bajaj Discover 100cc, Bajaj Platina 100cc

சுசிகி வாங்கலாமா

Suzuki Hayate பைக் (splendorக்கு மாற்றாக முயற்சிக்கலாம்).
112 cc என்ஜின்
4 speed gear box
மைலேஜ்;70kmpl
விலை; 46235
 ஆட்டோமொபைல் தமிழன் 100-110cc பரிந்துரை:
Honda Dream Yuga ,Suzuki Hayate,Hero Splendor plus

பைக்களின் முழுமையான மேலும் விவரங்கள் அறிய விரும்பினால் தொடர்புகொள்ள [email protected]

Advertise on this site contact   [email protected] (விளம்பரம் செய்ய அனுகவும்).

Comments