எம்ஆர்எஃப் ரைட் குழு அறிமுகம் – புதிய பாதை

எம்ஆர்எஃப் நிறுவனம் பைக் ரைடர்களுக்கான புதிய சமூக வலை குழுவை அறிமுகப்படுத்தியுள்ளது. ரைட் அலாங் வித் எம்ஆர்எஃப் (Ride along with MRF) என தொடங்கப்பட்டுள்ள பக்கத்தில் உங்கள் பயண அனுபவம் பகிர்தல் மற்றும் புதிய பயணத்துக்கான இடங்களை தேர்ந்தெடுக்கலாம்.

ridealongwithmrf

loading...

வார இறுதிநாட்களில் பயணிக்க ஏற்ற இடங்களை பரிந்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தளத்தில் முதற்கட்டமாக சென்னை , பெங்களூரூ , டெல்லி , மும்பை , நாக்பூர் மற்றும் கோல்கத்தா ஆகிய நகரங்களுக்கான விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களுக்கு எண்ணற்ற புதிய இடங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள தளத்தில் உணவு , தங்குவதற்கான ஏற்பாடுகள் , கோவில்கள் , வராலாற்று சிறப்புமிக்க இடங்கள் போன்றவற்றை வரிசைப்படுத்தி தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உங்களுடைய ரைடிங் கட்டுரைகள் பதிவேற்றலாம் , மற்றவர்களின் ரைடிங் அனுபவத்தினை பகிர்ந்துகொள்வது ரைடில் இணைவது , உங்கள் மோட்டார்சைக்கிள் பராமரிப்பு பற்றி தெரிந்துகொள்ளலாம்.

எம்ஆர்எஃப் ரைட் ஆலாங்வித் இணையமுகவரி ; www.ridealongwithmrf.com

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin