எம்வி அகஸ்டா F4 பைக் இந்தியா வந்தது

எம்வி அகஸ்டா F4 சூப்பர் பைக் ரூ.25.50 லட்சம் விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. புரூடேல் 1090 பைக்கினை தொடர்ந்து எம்வி அகஸ்டா F4 சூப்பர் பைக் வந்துள்ளது.

MV-Agusta-f4

கைனெடிக் குழுமத்துடன் இணைந்து செயல்பாட்டினை தொடங்கியுள்ள இத்தாலியின் எம்வி அகஸ்டா மிக சிறப்பான சூப்பர் பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளது. F3 800 மாடலை வரும் 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

loading...

எம்வி அகஸ்டா எஃப்4 பைக்கில் 195பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 110.9 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

 எம்வி அகஸ்டா F4 சூப்பர் பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 291 கிமீ ஆகும்.

அதிகப்படியான எலக்ட்ரானிக் சிறப்பம்சங்களை பெற்றுள்ள F4 சூப்பர் பைக்கில் வாகனத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் MVICS (Motor and Vehicle Integrated Control System) , 8 விதமான டிரைவிங் மோட் ஆப்ஷன் ,  என்ஜினை 4 விதமான மேப் முறை மற்றும் ரைட் பை வயர் முறையில் இயக்கும் ELDOR , ஏபிஎஸ் என பல வசதிகளை நிரந்தர அம்சமாக பெற்று விளங்குகின்றது.

எம்வி அகஸ்டா பைக்குகள் மோட்டார் ராயல் ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க ; எம்வி அகஸ்ட்டா புரூடேல் 1090 பைக் விபரம்

எம்வி அகஸ்டா F4 பைக் விலை ரூ.25.55 லட்சம்

MV-Agusta-f4-fr

MV-Agusta-f4-side

MV-Agusta-f4-rear
MV Agusta F4 Launched
loading...