எஸ்யூவி காரும் மத்திய அரசும்

எஸ்யூவி கார்களுக்கான புதிய விதிமுறையை சில மாதங்களுக்கு முன் வெளிவந்த மத்திய பட்ஜெட்டில் மாற்றியமைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதாவது 170மிமீ உயரத்திற்க்கு அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட் கார்களை எஸ்யூவியாக வரையறுத்தது.

இதுபோன்ற கார்களுக்கு ரூ.30000 வரை வரி உயர்த்தப்பட்டது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது நாட்டின் மிக பெரிய யூட்லட்டி வாகன தயாரிப்பாளாரான மஹிந்திரா நிறுவனம்தான.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

வரியினை தவிர்க்க மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காருக்கு ஸ்டோன் கார்டு என்ற கவரினை பயன்படுத்தி 200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை 160 ஆக குறைத்தது. இதனால் வரி உயர்வில் இருந்து தப்பித்தது.

ஆனாலும் மத்திய அரசு விடுவதாக இல்லை மீண்டும் புதிய விதியை வகுக்க திட்டமிட்டுள்ளதாம். அதாவது முழுமையாக நிரப்பட்ட நிலையிலே கிரவுன்ட் கிளியரன்ஸ் அளக்கப்படுகிறது. ஆனால் இந்த விதியை மாற்றி முழுமையாக கட்டமைக்கப்படாதா நிலையில் கிரவுன்ட் கிளியரன்ஸ் அளக்கப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளது.

Ads

இதனால் பெரிதும் பாதிக்கப்போவது மீண்டும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம்தான் .

இந்த திருத்தங்கள் அனைத்தும் மஹிந்திராவுக்கு எதிராகவே உள்ளது அதிர்ச்சியை தருகின்றது…

Comments