ஏதர் S340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் – மேக் இன் இந்தியா

இந்தியாவிலே உருவாக்கப்பட்டுள்ள முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ஏதர் எஸ்340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த வருடத்தின் இறுதியில் இந்தியளவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஏதர் S340 உச்ச வேகம் மணிக்கு 72 கிமீ ஆகும்.

ather-s340

ஏதர் எஸ் 340 ஸ்கூட்டரில் உள்ள IP67 லித்தியம் ஐயன் பேட்டரி 80 %  சார்ஜ் ஏற வெறும் 50 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதன் முழுமையான சார்ஜில் 60 கிமீ தூரமும் அதிகபட்ச வேகமாக 72 கிமீ வரை செல்லக்கூடியதாகும். இந்த பேட்டரியன் ஆயுட்காலம் சராசரியாக 50,000கிமீ தான்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வாட்டர் பூருஃப் டச் ஸ்கிரின் டேஸ்போர்டு  கொண்ட டிஜிட்டல் இன்ஸ்டூரூமென்ட் கிளஸ்ட்டர் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் மொபைலுடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எல்இடி முகப்பு மற்றும் டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.

ஃப்ளீப்கார்ட் வாயிலாக இந்த ஆண்டின் மத்தியில் முன்பதிவு தொடங்கப்பட உள்ளது.

 

ather-s340-rear

Comments

loading...
Tags: