ஏபிஎஸ் பிரேக் டிரக் மற்றும் பேருந்துகளில் கட்டாயம்

ஏபிஎஸ் எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு ஏப்ரல் 1 முதல் டிரக் மற்றும் பேருந்துகளில் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஐஷர் டிரக்

ஏபிஎஸ் பிரேக் என்றால் பிரேக் செய்யும் பொழுது சக்கரங்கள் பூட்டிக்கொள்ளாமல் செயல்படும் மிக சிறந்த பாதுகாப்பு அம்சமாக ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் செயல்படுகின்றது.

இந்திய அரசு பாதுகாப்பு அம்சங்களை நிரந்தர அம்சங்களாக வாகனங்களில் நிறுவுவதற்க்கு படிப்படியான முயற்சிகளை எடுத்து வருகின்றது. அந்த வரிசையில் தற்பொழுது 9 நபர்கள் பயணிக்கு பயணிகள் வாகனம் முதல் 12டன்னுக்கு அதிகமாக எடை சுமக்கும் அனைத்து கனரக வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல் 40டன் முதல் 49டன் வரை உள்ள வாகனங்களுக்கு ஏபிஎஸ் கட்டாயமக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்கு பிறகே மற்ற வாகனங்களில்  பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களின் விலை ரூ.15000 முதல் 75000 வரை வாகனங்களின் வகைக்கு ஏற்றார்போல விலை உயரும்.

கார் மற்றும் 125சிசிக்கு மேற்பட்ட பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக் கட்டாயமாக்குவதற்க்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்துவருகின்றது. இது நல்லதொரு தொடக்கம் என்றே சொல்லாம்…..

மேலும் வாசிக்க

ஆன்ட்டி லாக் பிரேக் என்றால் என்ன ?

பைக்கில் ஏபிஎஸ் கட்டாயம்

பாதுகாப்பினை விரும்பும் இந்தியர்கள் – ஜேடி பவர் சர்வே

Comments

loading...