ஐஷர் – போலரிஸ் மல்டிக்ஸ் விற்பனைக்கு வந்தது

ஐஷர் – போலரிஸ் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள முதல் இலகுரக வாகனம் மல்டிக்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மல்டிக்ஸ் இலகுரக டிரக் தொடக்க விலை ரூ.2.32 லட்சம் ஆகும்.

Eicher%2BPolaris%2BMultix ஐஷர் - போலரிஸ் மல்டிக்ஸ் விற்பனைக்கு வந்தது

பெர்சனல் யூட்டிலிட்டி வாகனம் (Personal Utility Vehicle -PUV) என அழைக்கப்படும் இந்த மல்டிக்ஸ் வாகனத்தில் கிராம்டன் கிரிவ்ஸ் நிறுவனத்தின் 511சிசி டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 28.45கிமீ ஆகும்.

1918 லிட்டர் கொள்ளளவுடன் 5 நபர்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மல்டிக்ஸ் வாகனத்தில் 3கிலோவாட் அளவுக்கு ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்ணிர் இறைக்க , இல்லங்களில் உள்ள விளக்குகளுக்கு உபோகிக்க முடியும்.

சிறிய தொழில் முனைவர்கள் , விவசாயிகள் , போன்றவர்களுக்கு உதவிபுரியும் வகையில் மல்டிக்ஸ் விளங்கும். ஆண்டுக்கு 60,000 வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

மூன்று விதமான வேரியண்டில் மல்டிக்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது. மல்டிக்ஸ் தொடக்க விலை ரூ.2.32 லட்சம் முதல் 2.72 லட்சம் வரை ஆகும்.

Eicher Polaris Launches Multix Personal Utility Vehicle  (PUV)

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin