ஓசிரோ மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்- புதிய நிறுவனம்

ஜப்பான் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓஷிரோ இரு சக்கர வாகன தயாரிக்கும் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் பைக்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளன.

நாடு முழுவதும் உள்ள மெட்ரோ நகரங்களில் ஷோரூம்களை திறப்பதற்க்காக செயல்பட்டு வருகின்றது. மாஹாரஷ்டிரா மாநிலத்தில் ஓசிரோ ஆலையை கட்டமைத்து வருகின்றது. ஆகஸ்ட் மாதம் உற்பத்தியை தொடங்க உள்ளது. முதல் கட்டமாக ஓஷிரோ 100- 150 சிசி பைக்களை களமிறக்க உள்ளது.மேலும் 125- 150சிசி ஸ்கூட்டர்களையும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
Oshiro Motorcycles and Scooters
இதன் மூலம் பைக் மார்க்கெட்டில் தனக்கென தனியான இடத்தை பிடிக்க குறைவான விலை மற்றும் சிறப்பான செயல்திறன் தரக்கூடிய பைக்களாக விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
தற்பொழுது ஓஷிரோ பைக்கிற்க்கான டீலர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.

Comments