ஓட்டுனரில்லா தானியங்கி டிரக் – டெய்மலர் டிரக்

உலகின் முதல் ஓட்டுனரில்லா தானியங்கி டெய்மலர் டிரக் பொது போக்குவரத்து சாலையில் வைத்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது.  80 கிமீ வேகத்தினை ஓட்டுனரில்லா டிரக் எட்டியுள்ளது.

daimler-mercedez-truck-13 ஓட்டுனரில்லா தானியங்கி டிரக் - டெய்மலர் டிரக்

கார் , பஸ் போன்ற தானியங்கி வாகனங்களுடன் தானியங்கி டிரக்குகளும் இணைந்துள்ளது. கூகுள் தொடங்கிவைத்த தானியங்கி கான்செப்ட் வெகுவாக அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்கள் செயல்பாட்டினை தொடங்கியுள்ளது.

ஜெர்மனியின் ஆட்டோபான் 8 விரைவு நெடுஞ்சாலையில் சிறப்பு அனுமதியுடன் முதல் நெரிசல் மிகுந்த பொது போக்குவரத்து சாலையில் வெற்றிகரமாக தனது பயணத்தினை நிறைவு செய்துள்ளது.

சோதனை ஓட்டம் என்பதனால் ஓட்டுநரின் கண்காணிப்பில் பயணத்தை தொடங்கிய டெய்மல்ர் தானியங்கி டிரக் மற்ற வாகனங்களின் செயல்பாட்டிற்க்கு ஏற்ப தன் செயல்பட்டுள்ளது.

daimler-mercedez-truck-camera ஓட்டுனரில்லா தானியங்கி டிரக் - டெய்மலர் டிரக்

செயற்க்கைகோள் நேவிகேஷன் , அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் , ஸ்டீரோ கேமராக்கள் , ஏக்டிவ் பிரேக் சிஸ்டம் போன்றவற்றின் உதவியுடன் தானியங்கி முறையில் சிறப்பான செயல்பாட்டினை தந்துள்ளது. மேலும் சோதனை ஓட்டத்தில் டெய்மல்ர் தானியங்கி டிரக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 80 கிமீ வரை எட்டியுள்ளது.

ஹைவே பைலட் என அழைக்கப்படும் இந்த நுட்பம் ஓட்டுநர் உதவியில்லாமலும் ஓட்டுநர் கட்டுப்பாட்டிலும் இயங்க வல்லதாகும். ஓட்டுநருக்கு தூக்கம் வந்தால் ஹைவே பைலட் மோடினை ஆன் செய்தால் தானியங்கி முறையில் இயங்க தொடங்கும். மேலும் தெளிவாக சாலை இல்லையென்றால் ஓட்டுநருக்கு எச்சரிக்கை தரும் டிரைவர் வாகனத்தின் கட்டுப்பாட்டினை எடுத்துக்கொள்ளவில்லை எனில் தானியங்கி முறையில் வண்டி சாலையின் ஓரத்தில் நின்றுவிடும்.

ஜெர்மனி மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளிலும் 20,000 கிமீக்கு மேல் சோதனை செய்யப்பட்டதில் சிறப்பான செயல்பாட்டினை தந்துள்ளதால் விரைவில் உற்பத்திக்கு செல்ல உள்ளது.

டெய்மலர் தானியங்கி டிரக் வீடியோ

     

daimler-mercedez-truck-camera ஓட்டுனரில்லா தானியங்கி டிரக் - டெய்மலர் டிரக்

daimler-mercedez-truck-communication ஓட்டுனரில்லா தானியங்கி டிரக் - டெய்மலர் டிரக்

daimler-mercedez-truck-hp ஓட்டுனரில்லா தானியங்கி டிரக் - டெய்மலர் டிரக்

daimler-mercedez-truck-j ஓட்டுனரில்லா தானியங்கி டிரக் - டெய்மலர் டிரக்

daimler-mercedez-truck-sys ஓட்டுனரில்லா தானியங்கி டிரக் - டெய்மலர் டிரக்

daimler-mercedez-truck-camera ஓட்டுனரில்லா தானியங்கி டிரக் - டெய்மலர் டிரக்

daimler-mercedez-truck-public-road ஓட்டுனரில்லா தானியங்கி டிரக் - டெய்மலர் டிரக்

Self-driving Daimler truck hits in the highway

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin