கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு அறிமுகம்

கவாஸாகி வெர்சிஸ் 1000 அட்வென்ச்சர் டூரர் பைக் இந்தியாவில் ரூ.12.90 விலையில் விற்பனைக்கு  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிகவும் சக்திவாய்ந்த அட்வென்ச்சர் டூரர் ரக பைக்கான வெர்சிஸ் 1000 பைக்கில் 1043சிசி 4 ஸ்டோர்க் திரவ குளிர்வாப்பான் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 120பிஎச்பி மற்றும் முறுக்கு விசை 102 என்எம் ஆகும். 6 வேக ஆளியக்கப் பரப்புகை பயன்படுத்தியுள்ளனர்.

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்

கவாஸாகி வெர்சிஸ் பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அமைப்பில்  முன்புறத்தில் இரட்டை ப்டெல் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் ஒரு டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.

அலுமினிய அடிச்சட்டதினை பெற்றுள்ள வெர்சிஸ் மிகவும் சிறப்பான சொகுசு மற்றும் அதிக தொலைவு பயணிக்க ஏற்ற வகையில் இதன் சஸ்பென்ஷன் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீண்ட தூரம் தொடர்ந்து பயணிக்கலாம்.

ads

249 கிலோ எடை கொண்ட வெர்சிஸ் பைக்கில் சிலிப்பர் கிளட்ச் கவாஸாகி டிராக்சன் கட்டுப்பாட்டு அமைப்பு, 17 இன்ச் ஆலாய் வீல், லக்கேஜ் பெட்டி போன்றவை குறிப்பிடதக்க அம்சங்களாகும்.

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விலை

முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனமாக இறக்குமதி செய்யப்படுவதனால் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கின் விலை ரூ.12.90 லட்சம் ஆகும். (ex-showroom pune)

Comments