கார் பராமரிப்பு செய்வது எப்படி – தெரிந்துகொள்ளுங்கள்

கார் பராமரிப்பு என்பது கூட அழகான கலைதான்.அதுபற்றி சில முக்கிய விவரங்களை எவ்வாறு பராமரிக்கலாம் காரினை என்பதனை கானலாம். பல இலட்சங்கள் செலவு செய்த காரினை வாரத்தில் ஒரு முறை கண்டிப்பாக கவனிக்க வேண்டிய சில விடயங்களை கானலாம்.

ford EcoSport

1. எஞ்சின் ஆயில்

என்ஜின் ஆயில் சரிவிகிதத்தில் பராமரிப்பது செய்வது மிக அவசியமான ஒன்று. என்ஜின் ஆயில் பராமரிக்க தவறினால் என்ஜின் முழுதாக பாதிக்கப்படும். இதனால் உங்கள் வாகனத்தின் திறனை முழுமையாக இழக்க நேரிடும்.

எவ்வாறு என்ஜின் ஆயில் சோதனை செய்வது.

ads

உங்கள் காரின் பெனட்டை திறந்து டிப் ஸ்டிக் மூலம் பரிசோதனை செய்யுங்கள். எஞ்சின் குளிர்ச்சியாக இருக்கும் பொழுது ஆயில் சற்று கெட்டி தன்மையுடன் இருக்கும். குறிக்கப்பட்ட அளவுக்கு மேல் அல்லது சற்று குறைவாக இருத்தல் அவசியம். ஆயில் கலரினை சோதனை செய்வது மிக அவசியம். எரிந்த நிலையில் அல்லது மிக அழுக்கான நிலையில் இருக்கின்றதா என ஆராய்ந்து பாருங்கள்.

ஆயில் மாற்ற தயாரிப்பாளர் கொடுத்த விவரங்களின் படி மாற்றுங்கள்.

2. டயர்

டயர்களை வாரம் ஒரு முறை பராமரிப்பதை விட தினமும் சோதனை செய்வது நல்லது. டயரில் தேவையற்ற பொருட்கள் பலவும் சிக்கும் எனவே அவற்றை தினமும் நீக்குவதனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். பிரஷர் கேஜ் கொண்டு காற்றுழுத்ததை டயர் சூடு இல்லாத நிலையில பரிசோதனை செய்யுங்கள். அப்பொழுதுதான் சரியான அழுத்தம் தெரியும். தயாரிப்பாளர் கொடுத்த அழுத்ததை பராமரியுங்கள்.

3. பேட்டரி

பேட்டரியில் எழுதியிருப்பது போல தினமும் அதனை கவனியுங்கள். பேட்டரியின் மேல் துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சூடான நீரினை கொண்டு சுத்தம் செய்யுங்கள். டிஸ்டில் வாட்டர்களை பயன்படுத்துங்கள்.

4.கூலன்ட் லேவல்

கூலன்ட் லேவலை சரியாக பராமரிப்பு அவசியம். இல்லையென்றால் புகைதான் வரும். ரிசர்வாய்ரில் உள்ள அதிகப்பட்ச கூலன்ட் லேவலுக்கு சற்று குறைவாக பராமரிப்பது நலம்..கூலன்ட் குழாய்களில் விரிசல் மற்றும் தேவையற்ற லிக்கேஜ் இல்லாமல் இருக்கின்றதா என உறுதி செய்யுங்கள்.

5. விளக்குகள்

பகல் நேரங்களில் கூட பயன்படுத்தும் விளக்குகள் வர தொடங்கிவிட்டன. முகப்பு விளக்குகள் மற்றும் பிரேக் விளக்குகளை பராமரியுங்கள். பிரேக் விளக்குகளை பிரேக்கினை பயன்படுத்தி சோதனை செய்யுங்கள். விளக்குகள் பழுதுபட்டால் உடனடியாக சரி செய்யுங்கள்.

6. முன்புற கண்ணாடி

முன்பற கண்ணாடியினை சரியாக பராமரித்தல் மிக அவசியம். அதற்கென உள்ள வாஷ் திரவங்களை பயன்படுத்துங்கள்

7. வைப்பர்கள்

வைப்பர்கள் சரியாக வேலை செய்கின்றதா ? அதன் பிளேட்களில் தேய்மானம் உள்ளதா என்பதனை சோதனை செய்யுங்கள். அதன் ஸ்பான்ச் மற்றும் ரப்பர்கள் போன்றவற்றை சோதியுங்கள்.

8. பாடிபேனல்

வாகனத்தின் பெயின்டிங் போன்றவை சோதனை செய்யுங்கள். எங்கேயேனும் சிராய்ப்புகள் அல்லது கீறல்கள் இருந்தால் உடனடியாக கவனியுங்கள். கவனிக்காமல் விட்டீர்கள் என்றால் அங்கு பெயர் எழுதிவிடுவார்கள் சிலர்…

9. உட்ப்புறம்

வாகனத்தின் உட்ப்புறம் மற்றும் இருக்கைகள் போன்றவற்றை வாரம் இரண்டு முறையாவது சுத்தம் செய்யுங்கள். உட்புறத்தில் இருந்து புகை மற்றும் மது போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்.

10. பிரேக்
பிரேக் மற்றும் வாகனத்தின் முக்கிய பாகங்களை தினமும் பராமரியுங்கள்
எவ்வளவு சிறப்பாக வாகனத்தை பராமரிப்பு செய்வதன் மூலம் அதிகப்படியான வீண் செலவுகளை குறைக்கலாம். வருமுன் காப்பது நலம்

பேட்டரி பராமரிப்பு குறித்து விரைவில் தனியான பதிவினை விரைவில் வெளியிடுகிறேன்.

Comments