மழைக்கால கார் பராமரிப்பு டிப்ஸ்

மழைக்காலத்தில் காரை இயக்குவது சற்று கடினமே எனவே நம் கார் பராமரிப்பு சரியாக இருந்தால் நம் பயணம் சற்று எளிது இல்லையன்றால் அழகான மழை காலம்கூட கடினம்தான். எவ்வாறு மழைக்காலத்தில் காரை பராமரிக்கலாம் என தெரிந்துகொள்ளலாம்.

மழைக்கால டிப்ஸ்

கார் பராமரிப்பு என்பது ஒரு அருமையான கலை போன்றதுதான் தங்களுக்கு விருப்பமான காரை நமக்கு ஏற்றார் போல் பராமரிக்கமால் காருக்கும் நம் பாதுகாப்புக்கும் ஏற்றார் போல் பராமரிப்பது மிக அவசியமே…

மழைக்கால கார் பராமரிப்பு

1. டயர்

ads

காரின் டயரை மழைக்காலம் மட்டுமல்லாமல் தினமும் சோதனை செய்வது நல்லது. ஒரு ரூபாய் நானயத்தை கொண்டு டயர் பட்டன் இடையில் வைக்கும்பொழுது அதனுடைய நானயம் தெரியும் அளவினை பொருத்து டயரை மாற்றலாம். மேலும் டயரில் உள்ள தேய்மான பட்னை பார்த்து மாற்றலாம்.

மழைக்கால டிப்ஸ்

சகதி மற்றும் ஈரப்பதம் நிறைந்த மழைக்கால சாலைக்கு மிக சிறப்பான கிரிப் தேவை என்பதால் உங்களை டயரை கவனியுங்கள்.

2. வைப்பர்

மழைக்காலத்தில் வீன்ட்ஷீல்ட் கண்ணாடியை மிக சுத்தாமாக வைத்துக்கொள்ளுங்கள் . தூசு , ஆயில் கறைகள் மற்றும் குப்பைகள் போன்றவற்றால் கண்ணாடி மிக பலவீனமடையும் என்பதால் கண்ணாடி மற்றும் வைப்பர் வாஷர் திரவத்தினை முறையாக பராமரிப்பது அவசியம்.

மழைக்கால டிப்ஸ்

வைப்பர் பிளேடினை சோதனை செய்து சரியான கால இடைவெளியில் மாற்றுங்கள்.

3. விளக்குகள்

இரவில் கார்களின் கண்கள் போல செயல்படும் முகப்பு விளக்குகளை சரியாக பராமரிக்க வேண்டியது மிக அவசியம். மிக தரமான நல்ல வெளிச்சம் தரக்கூடிய முகப்பு விளக்குளை பயன்படுத்துங்கள். மேலும் தயாரிப்பாளின் பரிந்துரைத்த விளக்குகளை பயன்படுத்துங்கள். கூடுதல் விளக்குகளை பயன்படுத்தினால் முறையான வயரிங் தெரிந்தவரை கொண்ட அமைத்துகொள்ளுங்கள்.

மழைக்கால டிப்ஸ்

4. மட் ஃபிளாப்

மழைக்காலத்தில் சேரும் சகதியும் வாரி அடிக்கும்பொழுது அதனை தடுக்கும் வகையில் உள்ள மட் ஃபிளாப் மிக அவசியம். கார் முழுதும் சகதி ஆவதை தடுக்கம். அருகில் பயணிக்கும் வாகனங்களின் வீன்ஷீல்ட் கண்ணாடியில் நீர் தெளிப்பதையும் தடுக்க முடியும்.

அனைத்து வாகன தயாரிப்பாளர்களுமே மழைக்காலம் தொடங்கி விட்டதால் மழைக்கால கேம்பினை அறிமுகம் செய்வார்கள். அவற்றில் உங்கள் வாகனத்தினை பரிசோதனை செய்யுங்கள்.

மழைக்கால டிப்ஸ்

எந்த காலமாக இருந்தாலும் மித வேகத்தில் பயணியுங்கள் . சாலை குறிப்புகளை கவனித்து வாகனத்தை இயக்குங்கள்.

Monsoon car care Tips

Comments